ஜீவாவிற்கு வெற்றியை கொடுத்ததா “வரலாறு முக்கியம்”! – திரை விமர்சனம்!

நடிகர் ஜீவா கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் ஜாலியான படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்தவர். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. கமர்ஷியல் வெற்றிக்கு காத்துக்கொண்டு இருக்கும் ஜீவாவுக்கு வரலாறு முக்கியம் கைகொடுத்ததா? என்று பார்ப்போம்.
கதைப்படி ஒரு பெண்ணை காதலிக்க கடுமையாக முயற்சிக்கும் இளைஞனின் முயற்சிகள் தான் வரலாறு முக்கியம் படத்தின் கதை. கதையாக பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றாலும் கலகலப்பாக திரைக்கதையால் படத்தை வெற்றிப்படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் ராஜன்.

படத்தின் நாயகன் கார்த்திக் (ஜீவா) கோயம்புத்தூரில் அப்பா அம்மாவுடன் வசித்து வருகிறார். யூடியூப் சேனல் நடத்தி வரும் அவர் வீட்டுக்கு அருகில் குடிவருகிறது கேரளாவைச் சேர்ந்த நாயகியின் குடும்பம். நாயகி யமுனாவை (காஷ்மீரா பர்தேஷி) பார்த்தவுடன் நாயகனுக்கு காதல். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இறுதியில் இவர்களது காதல் சேர்ந்ததா ? என்பதே வரலாறு முக்கியம்.
கார்த்தியாக ஜீவா நீண்ட நாட்களுக்கு பிறகு கலகலப்பான ஜீவாவை பார்க்க நன்றாக இருக்கிறது. எஸ்எம்எஸ் படத்திற்கு பிறகு சூப்பரான கதாபாத்திரம் அவருக்கு. வழக்கமான ஜாலியான ஜீவா திரும்ப வந்துவிட்டார். அதுவும் இவரும் விடிவி கணேஷும் அடிக்கும் லூட்டிகள் சூப்பர். விடிவி கணேஷுடன் முதல்முறையாக இணைந்துள்ளார் ஜீவா. இருவரது கெமிஸ்ட்ரி செமயாக ஒர்க்அவுட் ஆகி உள்ளது. சந்தோஷ் ராஜனின் காமெடி வசனங்கள் படத்திற்கு பலம்.
![]()
ஜீவாவின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் வழக்கமாக அம்மாவாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறார். அப்பாவாக கேஎஸ்.ரவிக்குமார் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். நாயகியின் தங்கையாக வரும் பிரக்யா மிகவும் அழகாக இருக்கிறார். ஜீவாவை துரத்தி துரத்தி காதலிக்கும் போது நமக்கு பொறாமை வருகிறது. ஷான் ரஹ்மானின் பாடல்கள் நன்று. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவாவிற்கு வெற்றியை கொடுத்துள்ளது வரலாறு முக்கியம்.

