அங்கீகாரம் திரைப்பட விமர்சனம்!

அங்கீகாரம்.. இந்த படத்தோட கதையை பத்தி பாத்தோம்னா.. படத்தோட ஹீரோ கேஜேஆர். சென்னையில ஒடுக்கப்பட்ட பின்னணிய சேர்ந்தவரு. தடகள வீரரான இவரு எப்படியாச்சு தடகளத்துல சாதிச்சு, தன்னோட அம்மா, தங்கையை நல்லா பாத்துக்கனும்னு நினைக்குறாரு. நேஷனல் அளவுல நல்லா விளையாடுற இவர, காமென்வெல்த் போட்டியில கலந்துக்க விடாம அசோசியேஷன்ல இருக்கற அதிகாரிங்க சூழ்ச்சி செய்யுறாங்க. இதுனால தனக்கான நீதி கேட்டு நீதியன்ற படியேருறாரு ஹீரோ.. ஹீரோவுக்கு நியாயம் கிடச்சுதா? அவரோட விளையாட்டு கனவு என்ன ஆச்சு அப்படிங்கறதுதான் இந்த படத்தோட கதை.
ஹீரோ கேஜேஆர். ஒரு சில சீன்ஸ்ல நல்லா நடிச்சிருந்தாலும் அவரோட நடிப்புல ஏதோ ஒன்னு மிஸ்ஸிங். தன்னோட லட்சியத்தை அடைய முடியாத ஏக்கத்தை வெளிப்படுத்துற இடங்கள்ல அவரோட நடிப்பு பரவாயில்லை.
விஜி வெங்கடேஷ், ரங்கராஜ பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்பட எல்லாக் கேரக்டர்களும் கொடுத்த வேலையைச் சரியாகச் செஞ்சிருக்காங்க. ஜிப்ரான் இசையில பாடல்கள் கவனிக்க வைக்குது. பின்னணி இசை கதையிலுள்ள கனத்தை நமக்கு கடத்துன்னே சொல்லலாம் .ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் தனது சிறப்பான உழைப்பை கொடுத்திருக்காரு.
ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட இளைஞன் திறமை இருந்தாலும் தனக்கான அங்கீகாரத்தை பெற எவ்வளவு போராட வேண்டி இருக்கு என்பதை சமரசமின்றி சொல்லியிருக்காரு இயக்குநர் தென்பதியன்.
இந்த நாடு கிரிக்கெட்டுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை ஏன் மற்ற விளையாட்டுக்கு கொடுக்க மாட்டேங்குது அப்படின்னு ஹீரோ கேட்கும் கேள்விகள் நல்லா இருக்கு. அதே சமயத்துல தமிழகத்துல இருக்கற விளையாட்டு மைதானங்களோட நிலைமையை பத்தியும் விளையாட்டு வீரர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத சூழல் பத்தியும் பேசியிருக்கறது கவனிக்க வைக்குது.
ஆனாலும் தேவையில்லாத க்ளிஷே காட்சிகள கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். சொல்ல வந்த விஷயம் முக்கியமானது அப்படினாலும் இன்னும் கொஞ்சம் நல்லாவே சொல்லியிருக்கலாம். மொத்தத்துல அங்கீகாரம்.. இன்றைய காலகட்டத்துல அவசியமான படம்னே சொல்லலாம்..

