சிங் கீதம் திரைப்பட விமர்சனம்!


சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருக்கற சிங் கீதம் படத்தோட விமர்சனத்தை பாக்கலாம் வாங்க.. சிங் கீதம்.. தங்கம் அதிகமா இருக்கற ஊருக்கு ஹீரோ அயான் வர்றாரு. ஊரே காடாக இருக்க, ஒரே ஒரு மரம் மட்டும் பெருசா வளர்ந்து நிக்குது. அந்த மரத்த நாயகி உயிரா நேசிக்கிறாங்க. அதே நேரத்துல பழைய சுரங்கம் மூடப்பட்ட நிலையில புதிய சுரங்கத்த வெச்சு நைஜீரிய தொழிலதிபருடன் ஒப்பந்தம் போடுறாங்க ரேணு. இந்த நிலையில அந்த மரத்துக்கு கீழதான் தங்கம் இருக்குன்னு சொல்லி மரத்த வெட்ட முயற்சி பண்றாங்க. அதுனால சோகமான நாயகி சாமிகிட்ட முறையிட போக அங்கிருக்கற குகைக்குள்ள தவறி விழுந்துடுறாங்க. கோபத்துல இருக்குற நாயகி ஊர் மக்கள சபிக்கிறமாதிரி பேச, அடுத்த நாளே மக்கள் எல்லோரும் பேசமுடியாம பாட ஆரம்பிக்குறாங்க.. அவங்க பேசுனாலே பாட்டுதான் வருது. இதுனால அதிர்ச்சியாகுற ஊர் மக்கள் இதுக்கு காரணம் என்ன அப்படின்னு கண்டுபிடிச்சாங்களா? அவங்க சாபம் நீங்கிச்சா ? அப்படிங்கறதுதான் கதை.

தமிழ்ல அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், காதலா காதலா உள்ளிட்ட படங்கள இயக்குன பழம்பெரும் இயங்குநரான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தன்னோட 94 வயசுல இந்த படத்த இயக்கியிருக்காரு. உடலுக்குத் தான் வயசாச்சே தவிர அவரோட கற்பனைக்கு இன்னும் வயசே ஆகலன்னு தான் சொல்லனும்.

சாபத்தால மக்கள் எல்லோருமே பாடிட்டே இருக்காங்க அப்படிங்கறதே நல்ல ஐடியா. ஸ்டார்ட்டிங்ல கொஞ்சம் மெதுவா போற படம் ஊர் மக்கள் சாபத்தால பாட தொடங்கியதும் சுவாரஸ்யம் ஏற்படுது. படத்துல நடிச்ச எல்லோரது நடிப்பும் நல்லா இருக்கு.

இயக்குனரோட நகைச்சுவை உணர்வு படம் முழுக்க அங்கங்க பளிச்சிடுது. ஃபிளாஷ் பேக்ல ஒரு அழகான சமூக கருத்த சொல்லியிருக்காங்க. தேவி ஸ்ரீபிரசாத் இசையில பாட்டு எல்லாமே நல்லா இருக்கு.. வசனங்களும் பாட்டாவே பாடியிறதால வித்தியாசமான அனுபவமா இருக்கு.

கிளைமேக்ஸ் கண்டிப்பா நல்ல எமோஷனல் பீலிங் கொடுக்கும். என்றாலுமே ஒட்டுமொத்தமாக ஜாலியான, வித்தியாசமான அனுபவமாக இந்த படம் இருக்கும். இந்த வயசுலயும் இதுமாதிரி கதையை தேர்ந்தெடுத்து கலைக்கு வயசே ஆகாதுன்னு நிரூபிச்சிருக்காரு இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்.. மொத்தத்துல சிங் கீதம்.. வித்தியாசமான முயற்சிக்காக பார்க்கலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted