கட்டா குஸ்தி 2 திரைப்பட விமர்சனம்!
![]()
கட்டா குஸ்தி 2.. இந்த படத்தோட கதை என்னன்னா.. மனைவி ஐஸ்வர்யா லட்சுமி மல்யுத்த விளையாட்டுல கவனம் செலுத்தி வரதால விஷ்ணு விஷால் ஹவுஸ் ஹஸ்பண்ட்டா இருந்து வீட்டு வேலைகளையும் குழந்தையையும் பாத்துக்குறாரு. நேஷனல் லெவல் போட்டிக்கு தயாராகுற ஐஸ்வர்யா லட்சுமிக்கு அவரோட பயிற்சியாளர் பொறாமை காரணமா ஹீரோயின இந்த போட்டியில தோற்கடிக்க திட்டம் தீட்டுறாரு. கோச் செஞ்ச சதியில என்னவென்றே தெரியாமல தினமும் சாப்பாட்டுல போதை மருந்தை கலந்து கொடுக்கிறாரு விஷ்ணு விஷால். இதுனால அந்தப் போட்டியில முதல் சுற்றிலேயே ஐஸ்வர்யா தோற்றுப் போக, அவருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்படுது. விஷ்ணு விஷால் தனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லியும் கணவர விட்டு பிரிஞ்சுபோற ஐஸ்வர்யா லட்சுமி விவகாரத்து கேட்டு வழக்கும் போடுறாங்க.. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு அப்படிங்கறதுதான் இந்த படத்தோட கதை.
விஷ்ணு விஷால் அன்பான கணவர், பாசமான அப்பாவா நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு. ஹவுஸ் ஹஸ்பண்ட்டா இவரு செய்யுற சேட்டைகள் ரசிக்க வைக்குது. மனைவியோட வெற்றிக்கு துணையா இருக்குறது, மகள் கிட்ட பாசத்தை பொழியுறதுன்னு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்காரு. காமெடியிலயும் கலக்கியிருக்காரு.
ஐஸ்வர்யா லட்சுமி பிரமாதப் படுத்தி இருக்காங்க. விளையாட்டு வீராங்கனை, குடும்ப பெண் என இருவேறுவிதமான கேரக்டர உள்வாங்கி அற்புதமா நடிச்சிருக்காங்க. கோபம், பாசம், கவலை, வீரம் என அத்தனை உணர்வுகளையும் சிறப்பா வெளிப்படுத்தியிருக்காங்க.
மகளா நடிச்சிருக்கற ஸாரா சியானா க்யூட் நடிப்பால ரசிக்க வெச்சிருக்காங்க. சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ்ல மனச கொள்ளையடிச்சிருக்காங்க. ஸ்கூல் டீச்சரா நடிச்சிருக்கற மோக்ஷா அழகா இருக்காங்க. தன்னோட கேரக்டர குறையில்லாம பண்ணியிருக்காங்க.. விஷ்ணு விஷால் கூட இவங்க போடுற அப்படிப் போடு குத்தாட்டம் வேற லெவல்.
கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஸிலி ஆண்டனி ஆகியோர நடிப்பும் படத்தை கலகலப்பா கொண்டுபோயி இருக்கு. சிறப்பு தோற்றத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ரெண்டு பேரும் தன்னோட பங்குக்கு காமெடில கலக்கி இருக்காங்க.
பாஸ்கரன் ஒளிப்பதிவுல மல்யுத்த காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் சூப்பரா வந்திருக்கு. ஷான் ரோல்டன் இசையில பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தோட பலமா இருக்கு.
முதல் பாகத்த போலவே இந்த பாகத்தையும் காமெடி கலந்து தேவையான எமோஷனல் சீன்ஸ் வெச்சு ரசிக்கற மாதிரி ஒரு படத்த கொடுத்திருக்காரு. செல்லா அய்யாவு. பாக்யராஜ் படங்கள்ல வர்றது போல கணவன் மனைவிக்குள்ள நடக்குற சண்டைய அழகா நகைச்சுவை கலந்த திரைக்கதை அமச்சு வெற்றிப் படமா கொடுத்திருக்காரு. அதுல பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கணவன், மனைவிக்குள்ள நடக்குற சண்டையில மூனாவது நபர்கள் நுழைய கூடாது அப்படிங்கற கருத்து சொல்லி ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படத்த கொடுத்துருக்காரு இயக்குனர்.. மொத்தத்துல கட்டா குஸ்தி 2.. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி..

