ரீ ரிலீஸ் செய்யப்பட்ட “பாபா” – கிளைமாக்ஸை மாற்றிய ரஜினி!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் பாபா. இப்படத்திற்கு ரஜினியே கதை, திரைக்கதை எழுதி தயாரித்தும் இருந்தார். ஆனால் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் எல்லாம் நஷ்ட ஈடு கேட்டு ரஜினியின் வீட்டை முற்றுகை இட்டது எல்லாம் தனிக்கதை.
![]()
இந்நிலையில் இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பாபா படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. ரீமாஸ்டரிங் செய்யப்பட்ட இந்த பாபா வெர்ஷன் பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. குறிப்பாக படத்தில் ரஜினிக்கு 7 மந்திரங்கள் கிடைக்கும். ஆனால் தற்போது அது 5 மந்திரங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும்
‘பாபா’ படத்தில், அரசியல் பாதையே சரி என்று பாபா மக்களை நோக்கி நடந்து வருவதாக இருக்கும். பின்னணயில் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் என்ற பாடல் ஒலிக்கும். இன்றைக்கு தனது ரசிகர்களே அதை விரும்பமாட்டார்கள் என உணர்ந்த அவர், மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் கிளைமேக்ஸை மாற்றியுள்ளார். ‘நீ உன் தாயின் மனதை காயப்படுத்தி இருக்கிறாய். எனவே மீண்டும் பிறந்து தாயின் ஆசையை நிறைவேற்று. நேரம் வரும்போது உன்னை அழைக்கிறேன்’ என பாபா கூறுவது போல் இறுதிகாட்சி மாற்றப்பட்டுள்ளது.

படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்று அதிகாலை காட்சி திரையிட்டபோது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். எல்லாம் ரஜினிகாந்த் என்ற ஒற்றை மந்திரம் தான் காரணம்.

