ஹபீபி திரைப்பட விமர்சனம்!

ஹபீபி.. இந்த படத்தோட கதை 1980ல தொடங்கி 2023ல முடியுது.. கஸ்தூரி ராஜாவோட குடும்பம் நெல்லையில நெசவுத் தொழில் செஞ்சிட்டு இருக்காங்க. விசைத்தறிகளோட வருகையால கைத்தறிகள் நலிந்துபோகுது. அதுனால கஸ்தூரி ராஜா தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்டுறாரு.. ஆனா கஸ்தூரி ராஜாவோட பையனான ஈசாவுக்கு மாளவிகா மனோஜ் மேல் காதல்.. இதுனால சித்தப்பா மாதிரி வெளிநாடு போகாம, ஊர்லயே எதாச்சு வேலை செஞ்சிட்டு இருக்காரு.. ஆனா விதி அவரையும் வெளிநாட்டுக்கு போக வெச்சிருது.. பலமுறை வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்த ஹீரோவுக்கு திருமணம் செஞ்சி வைக்க ஏற்பாடு நடக்குது.. திட்டமிட்டபடி திருமணம் நடந்துச்சா?. ஹீரோவோட காதல் என்ன ஆச்சு? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்தான் ஹபீபி படம்..

முகமது யூசுப் என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறாரு கஸ்தூரிராஜா. அவருடைய தோற்றம் அந்த வேடத்துக்கு மிகப்பொருத்தமா அமஞ்சிருக்கு..நடிப்புலயும் குறையில்லை.

ஹீரோ ஈஷா,இளமைத்துடிப்புடன் இருக்காரு.. ஹீரோயின் மாளவிகா மனோஜ் பின்னாடியே சுத்துறது.. காதலிக்காக திருட்டு பழியை ஏத்துக்கிட்டு அடி வாங்குறது அப்படின்னு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்காரு..

மாளவிகா மனோஜ், தனஸ்ரீ இவங்களோட நடிப்பும் நல்லா இருக்கு.. சித்தியாக நடிச்சிருக்கற அனுஸ்ரேயா ராஜன் நடிப்பும் யதார்த்தமா இருக்கு.. படத்துல வர்ற மற்ற கேரக்டர்களோட நடிப்பும் அவங்களோட தோற்றமும் படத்துக்கு பலமா இருக்குன்னே சொல்லலாம்..

மகேஷ் முத்துசாமியோட ஒளிப்பதிவு நெல்லை மண்ணையும் அந்த மக்களோட இயல்பையும் கச்சிதமா காட்சிப்படுத்தியிருக்கு.. ஒரு இஸ்லாமிய குடும்பத்துக்குள்ள வாழ்ந்த உணர்வ அவரோட ஒளிப்பதிவு கொடுத்திருக்கு.. சாம்.சி.எஸ் இசையில பாடல்களும் பின்னணி இசையும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு வளம் சேர்த்திருக்குன்னே சொல்லலாம்..

இதுவரை தமிழ் சினிமால இஸ்லாமியர்கள் காட்டப்பட்டதை விட இந்த படத்துல இஸ்லாமிய மக்களோட வாழ்வியல அப்படியே திரையில காட்டியிருக்காரு இயக்குனர் மீரா கதிரவன்.. முழுக்க முழுக்க அவங்களோட மத சடங்குகள், வாழ்க்கை முறை, வழிபாடு என அத்தனையுமே மிக இயல்பாக காட்டியதற்காகவே இயக்குனருக்கு வாழ்த்துகள்.

முதல் பாதி கொஞ்சம் மெதுவா போனாலும் திரைக்கதை அந்த குறையை நிவர்த்தி செஞ்சிருக்கு.. கிளைமாக்ஸ் பாதியில் முடியற மாதிரி இருந்தாலும் இந்த கதைக்கு பொருத்தமாக கிளைமாக்ஸா இருக்குன்னே சொல்லலாம். குடும்ப கஷ்டத்துக்காக வெளிநாட்டுக்கு போய் உழைக்குற அத்தனை பேருக்கும் இந்த படம் சமர்ப்பணம் அப்படின்னே சொல்லலாம்.. மொத்தத்துல ஹபீபி ஒரு நல்ல சிறுகதை படித்த உணர்வ கொடுத்திருக்குக்கு அப்படின்னே சொல்லலாம்..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted