மீண்டும் ஒரு வாடகைத் தாய்‌ பற்றிய திரைப்படம் – “யூகி” விமர்சனம்!

தற்போது சினிமா உலகில் வாடகைத்தாய் சீசன் போல. மீண்டும் ஒரு வாடகைத் தாய் தொடர்பான படமாக வெளியாகி உள்ளது ஸாக் ஹாரிஸ் இயக்கியுள்ள யூகி. நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமந்தா நடித்து கடந்த வாரம் யசோதா என்ற படம் வெளியானது. இதுவும் வாடகைத் தாய் பற்றிய கதைதான். ஆனால் அப்படம் மெடிக்கல் மாஃபியா பற்றியது. இப்படம் வாடகைத் தாய் பற்றிய படம் தான் ஆனால் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வந்துள்ளது.

கயல் ஆனந்தியை திடீரென காரில் கடத்தப்படுகிறார். இதனை கண்டுபிடிக்க டிஎஸ்பி பிரதாப் போத்தன், நரேன் தலைமையிலான குழுவை அனுப்புகிறார். அவருக்கு உதவியாக சஸ்பென்ஸ்ட் செய்யப்பட்ட எஸ்ஐ. கதிரை பிரதாப் போத்தன் அனுப்புகிறார். இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நட்டியும் கயல் ஆனந்தியை தேடுகிறார். இவர்கள் ஏன் ஆனந்தியை தேடுகிறார்கள்? அவர் என்ன ஆனார் ? என்பதுதான் யூகி.

படத்தின் ஹீரோ நரேன் தான். சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். முதல் பாதியில் அவ்வப்போது வந்து செல்லும் கதிர் இரண்டாம் பாதியில் தனது பணியை நன்றாக செய்துள்ளார். முதல் பாதி முழுவதும் ஆனந்தியை இரண்டு குழுவும் தேடுவதிலேயே முடிந்து விடுகிறது. அத்தனை யூகத்திற்கான முடிவுகளும் இரண்டாம் பாதியில் ஒவ்வொன்றாக அவிழ்கின்ற வகையில் சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். நட்டி யார் என்பதை கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லியுள்ளது சாமார்த்தியம். நட்டியின் நடிப்பும் படத்தின் ஓட்டத்திற்கு உதவுகிறது. பவித்ரா லட்சுமிக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நன்று. கயல் ஆனந்தி கண்களாலேயே நடித்துவிட்டுப் போகிறார். விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் தனது கணவனுக்காக வாடகைத் தாயாக மாறுகிறார். ரஞ்சின் ராஜ் இசையில் ஒரு பாடல் அருமை. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியுள்ளது. புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிபரப்பு படத்திற்கு தேவையான உதவியை செய்துள்ளது. முதல்பாதியில் வெறும் தேடுதல் வேட்டையை மட்டுமே காட்டியிருப்பது குறையாக உள்ளது. அதிலும் கொஞ்சம் டிவிஸ்ட் காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் யூகி படம்பார்ப்பவர்களை எளிதில் யூகிக்க வைக்காது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments