விஷாலின் ஆக்ஷன் அவதாரம் “லத்தி” திரைவிமர்சனம்!

வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லத்தி. விஷால் இதுவரை காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்‌. இப்படத்தில் முதல்முறையாக கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். போலீஸ் கான்ஸ்டபிளான விஷால் லத்தி ஸ்பெஷலிஸ்ட். மனைவி சுனைனா மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் ஒரு இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் சந்தேகப்பட்ட நபரை லாக்கப்பில் வைத்து வெளுத்து வாங்குகிறார் இதனால் மாதர் சங்கத்தினர் புகார் அளிக்கவே ஒருவருடம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். உயர் அதிகாரிகளின் உதவியுடன் ஆறு மாதத்திலேயே மீண்டும் பணியில் சேருகிறார். அந்த ஊரில் மிகப் பெரிய ரவுடியின் மகன் போலீஸ் உயரதிகாரியான பிரபுவின் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். இதனால் பிரபு மீது அந்த ரவுடியின் மகனை கடத்தி விடுகிறார். மேலும் விஷாலை வரவழைத்து அவர் கையாலேயே அவனை லாடம் கட்ட வைக்கிறார். முதலில் தயங்கும் விஷால் பின்னர் வெளுத்து வாங்குகிறார். இதனால் கடுங்கோபத்தில் இருக்கும் ரவுடியின் மகன் தன்னை விஷால் தான் அடித்தார் என்பதை கண்டுபிடிக்கிறார். மேலும் விஷால் தான் ரவுடியின் மகன் என்று தெரிந்துதான் அடித்தார் என்பதையும் அறிகிறார். இதனால் விஷாலை கொல்லத் துடிக்கிறான். இறுதியில் விஷாலை பழிவாங்கினாரா? விஷால் எதற்காக அத்தனை ஆக்ரோஷத்துடன் ரவுடியின் மகனை அடித்தார் என்பதே லத்தி சொல்லும் கதை.

ஒரு நல்ல கமர்ஷியல் படம் கொடுக்க‌ இயக்குனருடன் சேர்ந்து விஷாலும் உழைத்திருக்கிறார். தொடக்கத்தில் வித்தியாசமாக தொடங்கும் கதை போகப் போக பார்த்து சலித்த மசாலா படமாக மாறிவிடுகிறது. இரண்டாம் பாதி முழுவதும் ஒரு கட்டிடத்துக்குள்ளேயே எடுக்கப்பட்டுள்ளது. அந்த சண்டைக் காட்சியில் பீட்டர் ஹெய்னின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. விஷால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று இதில் இறங்கியுள்ளார். இதுவரை காவல்துறை உயரதிகாரிகளின் கதைகள் நிறைய வந்துள்ள நிலையில் முதல்முறையாக ஒரு கான்ஸ்டபிளை நாயகனாக்கியுள்ளார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியில் தனது மகனுக்காக உருகும் காட்சியில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். சுனைனா அன்பான மனைவியாக வந்து செல்கிறார். விஷாலின் மகனாக நடித்துள்ள மாஸ்டர் லிரிஷ் ராகவ் சின்ன வயதிலேயே நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். சண்டைக் காட்சிகளில் விஷாலுடனே வரும் அவர் ரோப்பில் தொங்கி அடி வாங்கி கஷ்டப்பட்டுள்ளார். இசை யுவன் சங்கர் ராஜா என்று போடுகிறார்கள் ஆனால் எங்கேயும் யுவனை காணவில்லை. நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஒரு முறை சென்று பார்க்கும் படி உள்ளது லத்தி.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments