பரிமளா அண்ட் கோ திரை விமர்சனம்!
![]()
பரிமளா அண்ட் கோ.. இந்த படத்தோட கதை என்னன்னா.. ஜெயராம், ஊர்வசி தம்பதிக்கு சஞ்சனா, அனந்திகா அப்படின்னு இரண்டு மகள்கள்.. நார்மல் மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கை இவங்களுக்கு.. ஏரியா ரவுடியான சாண்டி, அனந்திகாவ லவ் பண்றனு டார்ச்சர் கொடுக்குறாரு. இத தட்டிக்கேட்ட சஞ்சனா கிட்டயும் பிரச்சனை பண்றாரு சாண்டி. தன்னோட ரெண்டு மகள்களுக்கும் தொல்லை தர சாண்டிய கொலை செஞ்சரலாம்னு ஜெயராம் குடும்பம் திட்டம் போட, அடுத்த நாளே சாண்டி கொல்லப்படுறாரு. நாம யாரோ ஒருத்தருதான் கொலை செஞ்சிருக்கனும்னு குடும்பமே குழம்பிக்கிடக்க, இந்த வழக்க விசாரிக்க இன்ஸ்பெக்டர் மிஷ்கின் வர்றாரு. உண்மையில் சாண்டிய கொலை செஞ்சது யாரு.. ஜெயராம் குடும்பம் பிரச்சனையில இருந்து தப்பிச்சாங்களா அப்படிங்கறதுதான் கதை..
த்ரிஷ்யம் படம் மாதிரியான கதை. அதையே கொஞ்சம் டார்க் காமெடி கலந்து கொடுத்திருக்காரு இயக்குனர் பாண்டிராஜ்.. ஜெயராம் இந்த படத்துக்கு கச்சிதமா பொருந்தியிருக்காரு.. தன்னோட குடும்பத்துக்கு ஒன்னுன்னா எதுவேணா செய்வாரு.. ஆனா கொஞ்சம் காமெடியான பாடிலாங்குவேஜ் மூலமா ஸ்கிரீன்ல ஹியூமர் கூட்டியிருக்காரு. ஊர்வசிக்கு இது டெய்லர் மேட் கேரக்டர்.. ஸ்கிரீன்ல ரணகளப்படுத்திட்டாங்க.. அவங்களோட டயலாக் மற்றும் ரணகள காமெடிகள் ரசிக்க வைக்குது..
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் ரெண்டு பேரோட நடிப்பும் சில இடங்கள்ல போதுமானதாகவும் சில இடங்கள்ல போதுமா அப்படின்னு சொல்ற அளவுக்கு இருக்கு..யோகி பாபு காமெடி ஓகே ரகம் தான்..
மிஷ்கின் கேரக்டரும் அவரோட நடிப்பும் நல்லா இருக்கு.. மத்த கேரக்டர்ஸ்ம் கதைக்கு தேவையானத கொடுத்திருக்காங்க..ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் எதார்த்தம் மீறாத ஷாட்களால் கவனிக்க வைக்கிறாரு. ஃபாக்ஸ்னோட பின்னணி இசை நல்லா இருக்கு..
முதல்பாதி கதையை செட் பண்ண ரொம்ப டைம் எடுத்துக்குது. இரண்டாம் பாதில ஒருகட்டத்துல கதை நகராம ஒரே இடத்ததுல நிக்குற மாதிரி ஃபீல் ஆகுது. ஒரு கொலை அதை சுற்றி நடக்குற சம்பவங்கள வெச்சு முடிஞ்ச வரைக்கும் ஆடியன்ஸ சிரிக்க வைக்க முயற்சி செஞ்சிருக்காங்க. அதுலயும் ஒருசமூக கருத்த சொன்னது ஓகேவா இருக்கு.. ஆனாலும் அங்கங்கே சில குபீர் சிரிப்பு காட்சிகள சேர்த்திருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். மொத்தத்துல பரிமளா அண்ட் கோ.. இன்ஸ்டால்மெண்ட் காமெடி அப்படின்னே சொல்லலாம்..

