வரலட்சுமி சரத்குமாரின் V3 திரை விமர்சனம்!

கோவையில் ஆடுகளம் நரேனுக்கு இரண்டு மகள்கள் அதில் மூத்த மகள் பரீட்சை காரணமாக வெளியூர் சென்று வீடு திரும்பும் போது ஐந்து பேர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். இதற்கு அரசாங்கம் தன் அரசு துரித நடவடிக்கை எடுக்கிறது என்று காண்பிக்க தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஐந்து அப்பாவி வாலிபர்களை என்கவுண்டர் பண்ணி சாகடிக்கிறார்கள். இதனால் இந்த வாலிபர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்காக வரலட்சுமியை இந்த வழக்கை விசாரிக்க ஸ்பெஷல் ஆபிசராக நியமிக்கிறது. வரலட்சுமி இந்த வழக்கின் உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்கிறார். இதன் பின் என்ன என்பது தான் கதை. உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா? பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைப்பாடு என்ன என்பதை சொல்லியுள்ளார் இயக்குனர் அமுதவாணன்.

படத்தின் பலம் வரலட்சுமி, புதுமுகம் பாவனா மற்றும் ஆடுகளம் நரேன் இந்த மூவரின் நடிப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிக தைரியம் வேண்டும் அதை மிக சிறப்பாக செய்து இருக்கிறார் புதுமுகம் பாவனா. இவருக்கு சலைத்தவன் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆடுகளம் நரேன் மற்றும் வரலட்சுமி.
மொத்தத்தில் V3 அனைவரும் குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய ஒரு படம் அதே போல பாலியல் பலாத்காரத்துக்கு ஒரு தீர்வும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதை இந்த அரசு அமல்படுத்துமா என்பது தான் கேள்வி.

