டங்கி திரைப்பட விமர்சனம்!

டங்கி திரைப்பட விமர்சனம்!

புகழ்பெற்ற 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் டங்கி. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். லண்டன் மருத்துவமனையில் இருந்து டாப்ஸி தப்பிக்கும் அவர் தனது இரண்டு நண்பர்கள் உடன் இந்தியா செல்ல முடிவெடுக்கிறார். ஆனால் அவர்களுக்கு லண்டன் தூதரகம் விசா தர மறுக்கிறது. இதனால் இந்தியாவில் இருக்கும் தனது நண்பர் ஷாருக்கானின் உதவியை நாடுகிறார். அவர் இவர்களை துபாய் வரச் சொல்கிறார். ஏன் அவர்களுக்கு லண்டன் தூதரகம் விசா தரவில்லை? பின்னர் எப்படி அனைவரும் இந்தியா திரும்பி சென்றனர் என்பதே இப்படத்தின் கதை.

வெளிநாட்டு மோகத்தால் சொந்த நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நாடு கடப்பவர்களின் வலியை சொல்லியுள்ளார் ராஜ்குமார் ஹிரானி. டாப்சி தனது நண்பர்கள் விக்ரம் கோச்சர், அனில் குரோவர் சேர்ந்து நேர்மையான வழியில் விசா பெற முயற்சிக்கிறார். ஆனால் விசா கிடைக்கவில்லை. பின்னர் ஷாருக்கான் உடன் சேர்ந்து அனைவரும் சட்டவிரோதமான வழியில் லண்டன் செல்ல புறப்படுகின்றனர்.‌ செல்லும் வழியில் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை மிகவும் உணர்ச்சிபூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர். ஷாருக்கான் சிறப்பாக நடித்து இருந்தாலும் மொத்த படத்தையும் தனது தோலில் சுமந்துள்ளார் டாப்சி. பரோட்டா போடுவது எப்படி என்று ஆங்கிலத்தில் சொல்லும் காட்சியில் சிரிப்பு வரவழைத்து உள்ளார். நண்பர்களாக நடித்துள்ள விக்ரம் கோச்சர், அனில் குரோவர் இருவரும் நன்றாக நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றம் என்றாலும் விக்கி கவுசல் மிரட்டிவிடுகிறார். ஆங்கில ஆசிரியர் போமன் இரானி, நண்பர்கள் விக்ரம் கோச்சர், அனில் குரோவர் உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பைத் தந்துள்ளனர். வசனங்கள் படத்திற்கு பலமாக உள்ளது. முதல் பாதி கலகலப்பாக செல்கிறது. ஆனால் சொதப்பல் திரைக்கதையால் இரண்டாம் பாதி தொய்வை கொடுத்துள்ளது. படத்தின் நீளமும் சோதிக்கிறது.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய படங்களை காட்டிலும் டங்கி சற்று சுமார்தான். ஆனால் மோசமில்லை. ரேட்டிங் 3.2/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments