இங்க நான்தான் கிங்கு திரை விமர்சனம்!

இங்க நான்தான் கிங்கு திரை விமர்சனம்!

ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு. கடந்த முறை வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் சந்தானத்திற்கு வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படமும் காமெடி கதைக்களம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. காமெடி நடிகராக இருந்து நாயகனான பலர் சோபிக்கவில்லை. ஆனால் இதில் சரியான பாதையை தேர்வு செய்து கல்லா கட்டி வருகிறார் சந்தானம். இங்கு நான்தான் கிங்கு படத்தில் சந்தானம்,பிரியாலயா,தம்பி ராமைய்யா,பாலசரவணன்,விவேக் பிரசன்னா,சாமிநாதன், மாறன்,சேசு மற்றும் பலர் நடிப்பில் இமான் இசையில் ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் கோபுரம் பிக்சர்ஸ் அன்பு செழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கிறது.

பெற்றோர்கள் யாரும் இல்லாமல் தனித்து வாழும் நாயகன் சந்தானம் இவருக்கு கல்யாணம் பண்ணவேண்டும் என்ற ஆசையில் கடன் வாங்கி ஒரு வீடு வாங்கி இருப்பார். இந்த வீட்டின் மேல் இருபத்திஐந்து லட்சம் கடன் இருக்கும் இதனால் மனைவியாக வரப்போகும் வீட்டில் இருந்து 25லட்சம் ரூபாய் வரதட்சணை எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் ஜமீன்தார் பெண் என்று பிரியாலயா அவரை திருமணம் செய்கிறார் ஆனால் அவர் ஜமீன்தார் தான் அவரின் அப்பா தம்பி ராமைய்யா ஊரை சுற்றை கடன் வாங்கியதால் வீடு, சொத்து எல்லாம் இழந்துவிடுகிறார். இதனை மறைத்து சந்தானத்தை திருமணம் செய்துகொள்கிறார். எல்லாத்துக்கும் காரணம் தம்பி ராமையா மற்றும் அவரது தம்பி பால சரவணன் தான்.

இந்த சூழ்நிலையில் இவர்கள் தன்னை ஏமாற்றி விற்றார்கள் என்று தெரிய வருகிறது இருந்தும் தன் மாமனார் மற்றும் மச்சான் இருவரையும் தன கூடவே இருக்க வைக்கிறார். ஆனால் இவர்களால் இவருக்கு எப்பவும் பிரச்னை இந்த சூழ்நிலையில் ஒரு பிரச்சனையால் கடன் கொடுத்த நண்பன் விவேக் பிரசன்னாவிடம் தம்பி ராமையாவும் பாலா சரவணனும் பிரச்சனை செய்து விடுகிறார்கள் இதனால் அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடு என்று பிரச்னை செய்கிறார். இந்த கடனை கொடுத்தாரா இல்லை என்ன செய்தார் என்பது தான் மீதி கதை.

சந்தானம் நாயகனாக தொடரும் இங்க நாங்க தான் கின் படம் மூலம் மீண்டும் நானும் தமிழ் சினிமாவில் நானும் ஒரு கிங் என்று நிரூபித்து இருக்கிறார். படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார். குறிப்பாக புரோக்கராக வரும் மனோபாலா இந்த இருவர் கூட்டணி மீண்டும் ஒரு ரசனை மிகுந்த காமெடியை கொடுத்து அரங்கத்தை அதிரவைக்கிறது அதே போல தம்பிராமையா, பாலசரவணன் இந்த இருவருடன் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியில் நம்மை ரசிக்கவைக்கிறது.

நாயககியாக வரும் பிரியாலயா எதோ வந்தோம் போனோம் என்று இல்லாமல் தனக்கு கொடுத்த பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார்.குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை ரசிக்க வைக்கிறார். படத்துக்கு மிக பெரிய பலமாக மாமனாராக வரும் தம்பி ராமைய்யா மற்றும் மச்சான் பாலா சரவணன் இந்த இருவர் கூட்டணி காமெடி படத்துக்கு பலம் குறிப்பாக கிளைமாக்ஸ் ஹாஸ்பிடல் காட்சிகல் நம்மை சிரிக்கவைக்கிறார்கள். அதோடு படத்தில் விவேக் பிரசன்னா, சாமிநாதன், மாறன், சேசு இவர்கள் பங்களிப்பும் மிக முக்கியமாக உள்ளது.

படத்தில் பாடல்களிலும் பின்னணி இசையில் கூடுதல் பங்காற்றியுள்ளார் இமான். படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை படத்தின் முக்கிய பலம் என்றால் அது இயக்குனர் ஆனந்த் நாராயன் தான் அவரின் கதைக்களமும் சரி குறிப்பாக அவரின் திரைக்கதை தான் மிக பெரிய பலம் சந்தனம் பலம் தெரிந்து அதற்கு தேவையான ஒரு திரைக்கதை மூலம் நம்மை குதூகலப்படுத்தியுள்ளார். குறிப்பாக திருமண காட்சி அமைப்பும் சரி கிளைமாக்ஸ் காட்சியும் நம்மை அதிரவைக்கிறது. இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் படம் ரசிக்க வைக்கிறது. காமெடி படத்துக்கு லாஜிக் தேவையில்லை. மூளையை கழட்டி பார்க்கிங்ல வைத்துவிட்டு வந்து கவலை மறந்து ஜாலியாக சிரித்துவிட்டு போகலாம்.
மொத்தத்தில் இங்க நாங்க தான் கிங் நிச்சயம் நகைச்சுவை கிங் தான்

ரேட்டிங் 3.5/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments