பன்னிகுட்டி – திரை விமர்சனம்!
அனுசரண் இயக்கத்தில் கருணாகரன், யோகி பாபு, தங்கதுரை, ராமர், லியோனி உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள படம் பன்னிகுட்டி. பன்னி குட்டி பற்றிய மூடநம்பிக்கையை கதையின் மையமாக வைத்துள்ளார்… ஆரம்ப கதைக்களம் கருணாகரனிடமிருந்து ஆரம்பிக்கிறது.

தங்கையை கட்டிக்கொடுத்த இடத்தில் பிரச்சினை ஏற்பட தங்கை தாய் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். இதனால் அப்பா தினமும் குடித்துக் கொண்டே இருக்கிறார். வீட்டு மேல் சித்தப்பா வழக்கு தொடர்ந்துள்ளார். காதலும் கைகூடவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார் கருணாகரன். அவரை காப்பாற்றும் ராமர் மற்றும் தங்கதுரை பிரச்சினை தீர சாமியார் ஆன லியோனியிடம் அழைத்து செல்கின்றனர். அவரோ ஒரு பைக்கை திருடி ஒருநாள் முழுவதும் வைத்திருக்குமாறு சொல்கிறார். அப்படி பைக்கை திருடி பிறகு கருணாகரன் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடுகிறது. இதனால் மகிழ்ச்சியில் ராமரும் கருணாகரனும் ஜாலியாக வண்டியில் செல்லும்போது ஒரு வெள்ளைப் பன்றி மீது வண்டியை இடித்துவிடுகின்றனர். இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த வெள்ளைப்பன்னியால் கருணாகரனுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த பன்னி குட்டியோ யோகிபாபுவியிடம் உள்ளது ஒரு கட்டத்தில் அந்த பன்னி குட்டி தொலைந்து விடுகிறது யோகி பாபு மற்றும் கருணாகரன் அந்த பன்னிகுட்டியை தீவிரமாக தேடுகிறார்கள் இவர்கள் பன்னியை தேடும் சில இடங்களில் காமெடி நன்றாகவே இருக்கிறது.

யோகி பாபுவும் கருணாகரனும் பன்னிக்குட்டியைத் எதற்காக தேடுகிறார்கள்? பன்னிக்குட்டியைப் பிடிப்பார்களா? பன்னிக்குட்டி யாருக்கு சொந்தம்? கதையின் பின்னணி என்ன? என்பதே மீதமுள்ள கதைக்களம். இந்த கதையின் நாயகன் அந்த பன்னி குட்டி தான்
படத்தின் பிளஸ்
படத்தில் சிறப்பானவை
திரைக்கதை, சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு, கிருஷ்ண குமார் [K] இசை. படத்தின் மைன்ஸ்
மெல்ல நகரும் கதைக்களம்.
மொத்தத்தில் பன்னி குட்டி படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

