முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு – 800 திரைப்பட விமர்சனம்!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு – 800 திரைப்பட விமர்சனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ளது 800. இப்படத்தை ஸ்ரீபதி இயக்கியுள்ளார். முத்தையா முரளிதரனின் தாத்தா குடும்பம் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இலங்கையில் உள்ள மலை தோட்டங்களில் டீ பயிரிட அழைத்துச் செல்லப்படுகின்றனர். முரளியின் அப்பா வேல ராமமூர்த்தி கண்டியில் பிஸ்கட் தொழிற்சாலை வைத்துள்ளார். முரளிதரனுக்கு சிறு வயது முதலே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் அதிகம். முத்தையாவாக மதுர் மிட்டல் நடித்துள்ளார். மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அவரது கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்கு சென்றது, பள்ளி, கல்லூரியில் முத்தையா சாதித்தது, இங்கிலாந்தில் அறிமுகமான தொடரில் அதிருப்தி அளித்தது, மீண்டு வந்தது, உலகக் கோப்பை வெற்றி, சட்டவிரோதமாக பந்தை வீசுவதாக எழுந்த சர்ச்சை, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தது, பாகிஸ்தான் டூரில் இலங்கை அணி சென்ற பேருந்து மீது நடந்த தாக்குதல், இறுதி போட்டியில் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற சாதனை படைத்ததை காட்டியிருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் ஈழப் போராளிகளின் தலைவரை முத்தையா முரளிதரன் சந்திப்பதை காட்டுகிறார்கள். மாஸ்டர் என்று அழைக்கப்படும் அந்த தலைவராக நடித்திருக்கிறார் நரேன். எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனை மாஸ்டர் என்று தான் அழைத்தார்கள். அந்த சந்திப்பு தான் டென்ஷனே. தன் தாய் மண்ணாக பார்க்கும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் ஒருவர். மற்றொருவரோ தன் ஆயுத போராட்டத்தால் தான் தன் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நம்புகிறார். இப்படி வெவ்வேறு கருத்து உடையவர்கள் சந்திக்கிறார்கள். எப்பொழுதுமே தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டியதை நினைத்து எரிச்சல் அடையும் முத்தையாவின் விரக்தியை மதுர் மிட்டலின் நடிப்பில் ஓரளவுக்கு காண முடிகிறது.

மைதானத்தில் நடக்கும் காட்சிகள் அப்படியே வருகிறது. ஆனால் முத்தையாவின் இறுதி போட்டியில் கொஞ்சம் டிராமா கலந்து கனவுகளுடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதுடன், ஒரு திறமைசாலியின் சாதனையை தனித்து காட்டுகிறார்கள்.

மொத்தத்தில் படம் நமக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த படம் அதுவும் முரளிதரன் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். நல்லதொரு பயோபிக் படமாக இதனை கொடுத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீபதி. வேல ராமமூர்த்தி, ஜானகி சுரேஷ், வடிவுக்கரசி ஆகியோரின் நடிப்பு நன்று. மனலவியாக வரும் மகிமா நம்பியார் சில காட்சிகளே வந்தாலும் தனக்குள்ளே இருக்கும் மன போராட்டத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் இசை படத்தின் பிரம்மாண்டத்திற்கு துணை நிற்கின்றன. மொத்தத்தில் நல்லதொரு அருமையான பயோபிக்காக வந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments