கர திரைப்பட விமர்சனம்!

கர திரைப்பட விமர்சனம்!

போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கப்படும் இயக்குனராக மாறிய விக்னேஷ் ராஜா இப்போது தனுஷ் வைத்து இயக்கியியுள்ள படம்தான் கர..

இந்த படத்தோட கதை 1990கள்ல ராமநாதபுரம் மாவட்டத்துல நடக்குது.. திருட்டு தொழில் செய்யுற ஹீரோ தனுஷ், எம்எல்ஏ வீட்டுல திருட போன எடத்துல போலீஸ் கிட்ட மாட்டிக்கிறாரு.. டிஎஸ்பியான சுராஜ் வெஞ்சரமூடு ரிடயர்டு ஆகுற சமயத்துல பேரு, புகழோட ரிடயர்டு ஆகனும்னு நினக்கிறாரு.. இதுனால தனுஷ் திருட்டு வழக்க தானா முன்வந்து விசாரிக்கிறாரு.. அதுமட்டுமில்லாம
தனுஷ் மேல நிறைய வழக்குகள போடுறாரு.. இதுனால சுராஜ் வெஞ்சரமூடுவ தாக்கிட்டு தப்பிச்சுப் போய்டுறாரு தனுஷ்.. தப்பிச்சு போன தனுஷ் தன்னோட காதல் மனைவி மமிதா பைஜூ கூட ஆந்திரால ஹோட்டல்ல வேலை செஞ்சிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்காரு.. இந்த நிலையில சொந்தமா ஹோட்டல் வைக்கலாம்னு பேங்க்ல லோன் கேட்டு போனபோது சூரிட்டி கேட்குறாங்க.. எதுவுமே இல்லாத தனுஷ் ஊர்ல நிலம் இருக்குன்னு சொல்ல, அப்ப பத்திரத்தை கொண்டு வாங்க லோன் தரேன்னு பேங்கல சொல்லிடுறாங்க. நிலத்தோட பத்திரத்த வாங்க சொந்த ஊருக்கு போறாரு தனுஷ்.. அங்க அப்பா கே எஸ் ரவிக்குமார் கிட்ட நிலத்த வித்து பணத்த கேட்க அவரோ இடத்த அடமானமா வெச்சு டிராக்டர் வாங்கி வட்டி கட்டிட்டு இருக்குன்னு சொல்ல, தனுஷ் ஏமாந்துபோறாரு. அதுமட்டுமில்லாம ஊர் மக்கள் எல்லாருமே பேங்க்ல லோன் வாங்கி வட்டி கட்டிட்டு இருக்கற பாக்குற தனுஷ் ஒரு முடிவு எடுக்கறாரு.. அது என்ன‌ முடிவு?, நினச்ச மாதிரி இடத்த வித்து பணம் கெடச்சுதா அப்படிங்கறதுதான் கதை..

ஹீரோ தனுஷ் வழக்கமான தன்னோட சிறப்பான நடிப்பால ரசிக்க வெச்சிருக்காரு.. கரசாமியாவே வாழ்ந்திருக்காருன்னே சொல்லலாம்.. திருட்டு தொழில் மட்டுமே தெரிஞ்ச தனுஷ் அதவிட்டுட்டு மனைவிக்காக திருந்தி வாழ்ற இடத்துலயும் ஆனா சூழ்நிலை அவரை மறுபடியும் திருடனாக்குற இடத்துல அவரோட நடிப்பு அசரடிக்குது.. படம் முழுக்க தனுஷோட நடிப்பு படத்துக்கு கூடுதல் பலமா இருக்கு..

நாயகி மமிதா பைஜூக்கு அவ்வளவா வேலை இல்லை..‌ஆனாலும் நடிப்புல குறையில்ல.. டிஎஸ்பியா வர்ற சுராஜ் வெஞ்சரமூடு கலக்கியிருக்காரு.. அவருக்கும் தனுஷுக்குமான சீன்ஸ் சூப்பரா இருக்கு. பேங்க் மேனேஜரா நடிச்சிருக்கற ஜெயராமோட நடிப்பும் படத்துக்கு பலமா இருக்கு.. கே எஸ் ரவிக்குமார் கெட்டப்பும் நடிப்பும் இதுவரைக்கும் பார்க்காத அனுபவத்தை கொடுக்குது. எம்எஸ் பாஸ்கர், ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடிப்பும் நன்று.. பிரித்வி பாண்டியராஜன் சில காட்சிகளே வந்தாலும் நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு.. கருணாஸ் தன்னோட அனுபவ நடிப்ப கொடுத்திருக்காரு..

தேனி ஈஸ்வரோட ஒளிப்பதிவு ராமநாதபுரத்தோட வெக்கையையும் மண்மணத்தையும் அந்த மக்களோட வாழ்க்கையையும் அப்படியே படம் பிடிச்சிருக்கு.. கலை இயக்குநர் மாயபாண்டி 90கள்ல இருக்கற ராமநாதபுரத்த கண்முன்னாடி காட்டியிருக்காரு.. படத்துக்கு இன்னொரு பலம்னா அது ஜிவி பிரகாஷ் குமாரோட மியூசிக் தான்.. பாடல்கள் மற்றும் பின்னணி இசைல அசத்தியிருக்காரு..

இயக்குனர் விக்னேஷ் ராஜா கிராமங்கள்ல விவசாய லோன் வாங்கி வட்டி கட்ட முடியாத விவசாயிகளோட வலிய கமர்ஷியலா சொல்ல நினச்சிருக்காரு.. வங்கிகள் எப்படி லோன் அப்படிங்கிற பேர்ல மக்களோட வருமானத்த இழக்க வெச்சு மேலும் மேலும் அவங்கள கடனாளி ஆக்குது அப்படின்னும் சொல்ல நினச்சிருக்காரு.. திரைக்கதையில அங்கங்க சுவாரஸ்யம் சேர்ந்திருக்கறது ரசிக்க வைக்குது..‌ ஆனாலும் படத்தோட நீளம் குறையாகவே தெரியவில்லை.. தனுஷ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு இருவருக்குமான கேட் அண்ட் மவுஸ் ஆட்டம் அருமை.. மொத்ததில் கடன் என்கிற பெயரில் வங்கிகள் எப்படி பொதுமக்களை நசுக்குகிறது.. விவசாயிகளை ஏமாற்றி அவர்களது நிலங்களை கைப்பற்றுகிறது என்பதை அழகான கமர்ஷியல் படமாக கொடுத்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.. மொத்ததில் கர.. கருப்பசாமி..

ரேட்டிங். 4/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments