ஜமா திரை விமர்சனம்!

ஜமா திரை விமர்சனம்!

தெருக்கூத்து கலையையும் கலைஞர்களையும் பற்றிய படமாக வந்துள்ளது இந்த ஜமா. திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டாம்பட்டு என்ற ஊரில் ஜமா வைத்து நடத்துபவர் சேத்தன். அவரது ஜமாவில் திரௌபதி வேடம் போடுபவர் நாயகன் பாரி இளவழகன். பெண் வேடம் மட்டுமே போடுவதால் பெண் போன்றே நடை, நளினம் பெண் தன்மை கலந்திருக்கும். இதனால் இவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது. இதனால் மன வேதனை படும் அவரது அம்மா கூத்தில் அர்ஜூனன் வேடம் கேட்டு போட சொல்கிறார். இதை வாத்தியார் சேத்தனிடம் போய் நாயகன் கேட்க அவரை அவமானப்படுத்தி அனுப்புகிறார். மேலும் வாத்தியார் மகள் அம்மு அபிராமி நாயகனை காதலிக்கிறார். இதனால் கோபப்படும் வாத்தியார் நாயகன் பாரிக்கு பல்வேறு இன்னல்களை கொடுக்கிறார். இறுதியில் அர்ஜுனன் வேடம் போட்டாரா? காதல் கை கூடியதா என்பதே இந்த ஜமா.

படத்தில் நாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் இயக்கியும் உள்ளார் பாரி இளவழகன். பெண் வேடமிட்டு நடிப்பவர்களின் உடல்மொழியை அப்படியே கச்சிதமாக கொண்டு வந்துள்ளார். நடிப்பிலும் அசத்தியுள்ளார்.‌ அம்மு அபிராமி தனக்கு கொடுத்த வேடத்தில் அழகு தேவதையாக வந்து கவர்கிறார். கூத்து வாத்தியாராக சேத்தன். இதுபோன்ற கதாபாத்திரம் கிடைக்கத்தான் காத்துக் கொண்டு இருந்தது போல் பின்னியெடுத்துவிட்டார். விருது நிச்சயம்.

பாரியின் அம்மா மணிமேகலை, அப்பா கிருஷ்ணதயாள் உள்ளிட்ட அனைவரது நடிப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலம். இளையராஜா இசை படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதுபோன்ற கதைகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. மனுஷன் பின்னியெடுத்துள்ளார். நீ இருக்கும் உசரத்துக்கு பாடல் ஒன்று போதும் ராஜாவின் மகிமை சொல்ல. தேனாக பாய்கிறது காதில்.

கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு இரவு நேர கூத்து காட்சிகளை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். முதல் பாதி தெளிவான நீரோடை போல் இருந்தது. பிளாஷ்பேக் காட்சிகளின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம்.‌இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்தினாலும் குறையில்லை. மொத்தத்தில் ஜமா – கிரீடம். ரேட்டிங் 3.5/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments