ஹனுமான் திரைப்பட விமர்சனம்!

ஹனுமான் திரைப்பட விமர்சனம்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹனுமான். ஃபேண்டஸி படமான இது இந்த பொங்கலுக்கு தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி வினய் சிறு வயதில் இருந்தே சூப்பர் ஹீரோ ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர். நிறைய சூப்பர் ஹீரோ படங்கள் பார்த்து தானும் அதுபோல ஆக நினைக்கிறார். இதற்கு தனது பெற்றோர் தடையாக இருப்பதால் அவர்களையே திட்டமிட்டு விபத்து போல ஏற்படுத்தி கொன்று விடுகிறார். மற்றொரு புறம் நாயகன் தனது அக்கா வரலட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். சின்ன சின்ன திருட்டு வேலை செய்துவரும் அவரை ஊரே திருடன் என பேசுகிறது.. நாயகி அம்ரிதாவை காதலிக்கும் நாயகன் அவரை கொள்ளைக்கார கும்பலிடம் இருந்து காப்பாற்றும்போது அந்த கும்பல் இவரை அடுத்து சரமாரியாக குத்தி ஆற்றில் வீசுகிறது.. நீரில் மூழ்கும் இவர் அங்கு அதிசய கல் ஒன்றை எடுக்கிறார். இது இவருக்கு அதீத சக்தியை கொடுக்கிறது. ஹனுமானின் ரத்தத்தில் இருந்து உருவான கல் என்பதால் இவருக்கும் ஹனுமானின் சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை வைத்துக் கொண்டு ஊரை தனது கட்டுப்பாட்டுக்குள் மிரட்டி வைத்துள்ள கும்பலை அடித்து துவைக்கிறார். இதனால் இவரை ஹீரோவாக ஊர் மக்கள் பார்க்கிறார்கள்.. இவரது சக்தியை பற்றி அறியும் வினய் அதனை கைப்பற்ற நினைத்து ஊருக்குள் வருகிறார். இறுதியில் அந்த சக்தியை கைப்பற்றினாரா? அதனை ஹீரோ எப்படி முறியடித்தான் என்பதை ஃபேண்டஸி கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.

 

ஹனுமான் பற்றிய படமாக இது உருவாகியுள்ளது. ஆன்மிகம் கலந்து அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக உள்ளது. மிகப் பெரிய அனுமான் சிலை பிரமிக்க வைக்கிறது. நாயகன் தேஜா சஜ்ஜா நன்றாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது ஹிரோயிஸம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. நாயகியாக அம்ரிதா வழக்கமாக இதுபோன்ற படங்களில் நாயகியின் பங்கு என்னவோ அதுதான் இதிலும் செய்துள்ளார். வரலட்சுமி பாசக்கார அக்காவாக நடித்துள்ளார்.‌ இவருக்கு வைத்துள்ள சண்டைக் காட்சிகள் சிறப்பு.

ஒளிப்பதிவு மற்றும் இசை படத்துக்கு தேவையானதை செய்துள்ளது. சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம் குறைவின்றி செய்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். ஹனுமான் தொடர்பான கதைகள் மற்றும் காட்சிகள் நன்றாக உள்ளது. மொத்தத்தில் குழந்தைகளுக்கு பிடிக்கும் படமாக உள்ளது. ரேட்டிங் 3/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments