ஜோஷ்வா இமை போல் காக்க – திரை விமர்சனம்!

ஜோஷ்வா இமை போல் காக்க – திரை விமர்சனம்!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவனுக்கு எதிராக வாதாடும் பெண் வக்கீல் நாயகியை காப்பாற்றும் நாயகனின் கதைதான் ஜோஷ்வா. சர்வதேச கான்ட்ராக் கொலைகாரனான வருண் ஒரு கொலை சம்பவத்தில் நாயகியை சந்திக்கிறார். உடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒருசில சந்திப்புக்கு பிறகு அவரும் காதலிக்க தொடங்குகிறார். ஒருநாள் நாயகியிடம் உண்மையை சொல்லிவிடுகிறார். இதனால் கோபம் கொண்டு காதல் வேண்டாம் என்று சென்றுவிடுகிறார். இந்த நிலையில் மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் தலைவனை அமெரிக்க போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் நாயகியை கொலை செய்ய கடத்தல்காரன் திட்டமிடுகிறான். இவர்களிடம் இருந்து நாயகன் நாயகியை காப்பாற்றினாரா? என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியுள்ளார் கௌதம் மேனன்.

கௌதம் மேனன் படங்கள் என்றாலே காதலும் ஆக்ஷனும் ரசிக்கும் வகையில் இருக்கும் இதிலும் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் வசீகரம் குறைவு என்பது மட்டும் தான் குறை. நாயகன்‌ வருண் சர்வதேச கான்ட்ராக் கொலைகாரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு பாராட்ட வைக்கிறது. முக்கியமான காட்சிகளில் அவரது நடிப்பு நன்று. நாயகி ராஹி வழக்கமான கௌதம் பட‌நாயகி. ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் அவரிடம். திவ்ய தர்ஷினி கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல்தான் நன்றாக செய்துள்ளார்.

நடிகர் கிருஷ்ணா உள்ளூர் கூலிப்படை தலைவனாக வருகிறார். நன்றாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் யான்னிக் பென் இருவரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர். ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் கவர்கின்றன. கார்த்திக்கின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓகே.

படம் தொடங்கி இறுதி வரை பரபர ஆக்ஷன் தான் ஆனாலும் கௌதம் மேனன் படங்களில் இருக்கும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். அதுவே ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஆனாலும் குறையில்லை. மொத்தத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க – காக்க காக்க. ரேட்டிங் 3.5/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments