அருள்நிதியால் மட்டும் எப்படி முடிகிறது – தேஜாவு திரை விமர்சனம் !
நடிகர் அருள்நிதி நடிப்பில் புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தேஜாவு.

படத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிடுகின்றனர். அதில் ஒருவர் மட்டும் போலீசில் இருந்து தப்பிக்க அவன் யார் அவன் எவ்வாறு தண்டிக்க படுகிறான் என்பதே கதை. டிஜிபி ஆஷாவின் (மதுபாலா) மகளை ஒரு கும்பல் கடத்திவிடுகின்றனர். அது மீடியாக்களுக்கு தெரிந்து அதை பெரிதுபடுதுகின்றனர். மேலிடத்தில் இருந்து கடத்தல் சம்பவத்தை மறைக்க பார்க்கின்றனர். டிஜிபி ஆஷா அதற்கு தனிப்பிரிவு போலீஸ் அதிகாரியை நியமிக்கிறார். அதன்படி போலீஸ் அதிகாரியாக விக்ரம் குமார் (அருள் நிதி) வருகிறார். போலீஸ் அதிகாரியாக அருள்நிதி தனது விசாரணையை தொடங்குகிறார். முதலில் எழுத்தாளராக வரும் அசியுத்யிடம் விசாரணையை தொடங்குகிறார். அசியுத் எழுதும் கதைகள் நிஜத்தில் நடப்பது போல் காட்சிகள் இருக்கும். விக்ரம் குமார் இந்த விசாரணையில் டிஜிபி ஆஷா மகளை கண்டுபிடிக்கிறாரா? யார் அந்த கடத்தல் கும்பல்? டிஜிபிக்கும் கடத்தல் கும்பலுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
அருள்நிதி எப்போதும் வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பவர். இதிலும் அப்படியே. அறிமுக இயக்குனர் அரவிந்த் மிகவும் சிறப்பாகவே தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் வரும் திரில்லர் காட்சிகள் அதிகமாக சஸ்பென்ஸ் நிறைந்த கதையாக உருவாக்கியுள்ளார். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜிப்ரானின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. காட்சிகளின் அதிர்வுகளை பார்வையாளர்களுக்கு தனது பின்னணி இசை மூலம் சுலபமாக கடத்துகிறார். படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகளை தவிர்த்த இயக்குனர் அரவிந்த் படத்தை சுவாரசியம் குறையாமல் இயக்கிருகிறார். படம் பார்க்கும் பொழுது அதன் குறைகள் பெரிதாக வெளிப்படவில்லை என்பதே நிதர்சனம்.

படத்தில் அருள் நிதி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. கதைத் தேர்வில் எப்போதும் தான் கில்லி என்பதை அருள்நிதி இதிலும் நிரூபித்துள்ளார். திரில்லர் சஸ்பென்ஸ் கதைகளில் அருள் நிதி இந்த படம் ஒரு வெற்றி தான். மதுபாலா டிஜிபியாக தனது நடிப்பில் அசத்தியுள்ளார். மதுபாலாவிற்கும் இந்த படம் இரண்டாம் இன்னிங்ஸ் ஆக இருக்கும். அசியுத் எழுத்தாளராக மிகவும் சரியாக நடித்து இருக்கிறார் மற்றும் நடிகர் காளி வெங்கட் போலீஸ் ஆக நடித்து இருப்பார். அவருடைய காமெடி காட்சிகளை ரசிகர்களை சிரிக்க வைத்தது என்று சொல்லாம். ஒரு பத்திரிகையாளராக பணியாற்றி தற்போது ஒரு அருமையான த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் அரவிந்த். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராகவ் விஜய்யின் நடிப்பும் அருமையாக உள்ளது.
மொத்தத்தில் தேஜாவு த்ரில்லர் படம் விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

