D பிளாக் – விமர்சனம்

கோவையை சேர்ந்த ஒரு கல்லூரியில் தொடர்ந்து பெண்கள் மர்மமாக காணாமல் போகிறார்கள் சிலர் இறந்து விடுகின்றனர். இவர்களை புலி அடித்துக்கொன்றுவிட்டதாக நம்புகிறார்கள். ஆனால் அவர்களை புலி அடித்ததா இல்லை வேறு யாராவது கொலை செய்தார்களா என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த மர்மத்தை தனது சக மாணவர்களுடன் கண்டுபிடிக்கிறார் அருள்நிதி இது தான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி இது ஒரு உண்மை சம்பவம் என்று இயக்குனர் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். எரும சாணி யூடியூப் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அருள்நிதி த்ரில்லர் மற்றும் திகில் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் அருள்நிதி இப்படத்தையும் அதே நோக்கத்தில் தான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். புதுமுகம் விஜய் இதில் நடித்தும் இருக்கிறார். நண்பர்களாக வரும் கதிர் தனக்கு கொடுக்கப்பட்ட பணி ஓரளவு சிறப்பாக செய்துள்ளார். முதல் பாதி கல்லூரி, காதல், காமெடி என செல்கிறது. இடைஇடையே கொஞ்சம் பயமுறுத்த முயற்சித்துள்ளனர். கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் தெரியவந்தாலும் திரைக்கதையை கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை நோக்கி முன்னேறும் விதத்தில் அது எடுபடவில்லை. சமீபகாலமாக சைக்கோ கொலையாளி பற்றிய படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து காணப்படுகின்றன. ஏன் அவன் இப்படி ஆனால் என்பதற்கு சொல்லப்படும் காரணம் அவ்வளவு நம்பும்படியாக இல்லை.

அருள்நிதி வழக்கம்போல ஒரு சராசரி படத்தைத் தாங்கிப்பிடிக்கும் திறமையுடன், கண்ணியமான வேலையைச் செய்திருக்கிறார். நல்ல அம்சம் என்னவென்றால், இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்கள் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன, மேலும் ஸ்ருதியுடன் (அவந்திகா மிஸ்ரா) காதல் காட்சிகள் மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் படத்தின் ஓட்டத்தைத் தொந்தரவு செய்யவில்லை. தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, கரு.பழனியப்பன் போன்ற பல துணை நடிகர்கள் படம் இயங்குவதற்குத் தேவையான பரபரப்பை உருவாக்கியுள்ளனர்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருக்கலாம். இசை அமைப்பாளர் ரான் எத்தனின் பிண்ணனி இசை காட்சிகளுக்கு தேவையான பயத்தை ரசிகர்களுக்கு கடத்துகிறது. மொத்தத்தில் டி பிளாக் மக்களின் ரசிக்க வைக்கிறது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments