அநீதி – திரை விமர்சனம்!

அநீதி – திரை விமர்சனம்!

இயக்குனர் வசந்தபாலன்
எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்து வரும் இயக்குநர். இப்படத்திலும் அதே போல் ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். படம்‌ எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் மன ரீதியாக பாதிக்கப்பட்டும் நாயகன் அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நாயகி துஷாரா விஜயனுடனான காதல் அவரது மனநிலையை மாற்றி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வரும் நிலையில், சூழ்நிலை காரணமாக அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன், ஒரு குற்ற சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்க்கை திசை மாறுவதோடு, எளியவர்களுக்கு சட்டம் எப்படி அநீதி இழக்கப்படுகிறது என்பதை சொல்வது தான் ‘அநீதி’ படத்தின் கதை.

இதுவரை வில்லன் கதாபாத்திரங்களை நடித்து வந்த அர்ஜுன் தாஸ் முதல் முறையாக நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். இந்த கதைக்கு அவரது முந்தைய வில்லத்தனம் உதவியாக இருக்கிறது. அவரது ப்ளஸ் பாய்ண்ட் குரல்தான். யாரை பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்று துடிக்கும் ஒரு கதாபாத்திரம். சிறுவயது சம்பவத்தால் மனநிலை பாதித்து உணவு டெலிவரி செய்யும் இளைஞராக சிறப்பாக நடித்துள்ளார். தனிமை, வெறுமை, காதலியின் துரோகம் என அத்தனை உணர்வுகளையும் தனது நடிப்பால் தாங்குகிறார்.

 

துஷாரா விஜயன் படத்துக்கு படம் தன்னை வேறு ஒரு பரிமாணத்தில் மாற்றி வருகிறார். பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருக்கிறார். வீட்டு வேலைக்காரியாக ஏழை குடும்பத்து பெண்ணாக மனம் கவர்கிறார். காதல் காட்சிகளில் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். அத்தனை உணர்வுகளையும் அசால்ட்டாக வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் பாலன் படங்களில் எப்போதுமே முதலாளித்துவத்தை மூர்க்க குணமுடையவர்களாக காட்டுவார். இதிலும் அப்படியே. ஆனால் படத்தின் தொடக்கமும் முடிவும் இது அவரது படம் என்று சொல்லமுடியாது வகையில் உள்ளது. காதல் காட்சிகள், அர்ஜுன் தாஸ் சம்பந்தமான ஃபிளாஷ் பேக் காட்சிகள் கவர்கின்றன. ஆனால் அதிகமான ரத்தக் காட்சிகள் முகம் சுழிக்க வைக்கிறது.
காளி வெங்கட், சாந்தா தனஜெயன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எட்வின் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம் இயக்குனரின் மனமறிந்து கதைக்கேற்ப ஒரு மிகச்சிறந்த ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தின் மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் திரைக்கதை ஏற்ப பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல இனிமையான பாடல்களையும் கொடுத்து இயக்குனருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார்.

இரண்டாம் பாதி இலக்கு இல்லாமல் செல்கிறது. அடுத்தடுத்து கொலை செய்யும் ஹீரோ இறுதியில் நம்மையும் கொன்றுவிடுவாரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மொத்தத்தில் அநீதி – பாதி நீதி. ரேட்டிங் 3/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments