அயலான் திரை விமர்சனம்!

அயலான் திரை விமர்சனம்!

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இப்படம் ஒருவழியாக இந்த பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் ஏலியன் சம்பந்தப்பட்ட கதையாக இப்படம் உருவாகி உள்ளது. படத்தின் கதைப்படி சிவகார்த்திகேயன் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் ஏற்பட்ட கடனுக்காக சென்னை செல்கிறார். அங்கு கருணாகரன், யோகி பாபு குழுவுடன் தங்கி வேலை செய்து வருகிறார். இன்னொரு பக்கம் கார்ப்பரேட் கும்பல் ஒன்று பூமியின் நடுப்பகுதியில் ஆய்வு செய்து ஆபத்தான விஷவாயுவை எடுத்து விற்பனை செய்ய முயல்கிறது. இதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்பதால் வேற்று கிரகத்தில் இருந்து ஏலியன் ஒன்று அதனை தடுக்க பூமிக்கு வருகிறது. இது எதிர்பாராத விதமாக சிவகார்த்திகேயன் குழுவுடன் இணைகிறது. இறுதியில் கார்ப்பரேட் கும்பலின் திட்டம் நிறைவேறியதா? ஏலியன் திரும்பி தனது சொந்த கிரகம் திரும்பியதா? பூமி காப்பாற்றப்பட்டதா? என்பதே கதை.

இயக்குநர் ரவிக்குமார் தனது முந்தைய படத்தை போலவே இப்படத்தையும் அறிவியல் புனைவு கதையாக எடுத்துள்ளார். அதுவும் குழந்தைகளுக்கு பிடித்த ஏலியன் கதையை சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார். சிவகார்த்திகேயன் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கும் ஏலியனுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளார் சித்தார்த். அது மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது. படத்தின் மிகப் பெரிய பலம் விஎஃப்எக்.‌ ஹாலிவுட் தரத்தில் இதன் சிஜி காட்சிகள் உள்ளன. இதுவே படத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கேமரா மற்றும் எடிட்டிங் கச்சிதம். ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் இன்னும் மிரட்டி இருக்கலாம்.

நாயகி மற்றும் நண்பர்களாக வரும் கருணாகரன், யோகி பாபு, கோதண்டம் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தமிழில் இப்படி ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்பதே பெரிய விஷயம். அதனை அனைவரும் விரும்பிபார்க்கும் வகையில் இயக்குனர் ரவிக்குமார் கொடுத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியில் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்பதற்கு அயலான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மொத்தத்தில் அயலான் – வென்றான். ரேட்டிங் 3.5/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments