எப்படி இருக்கிறது “மைக்கேல்” திரை விமர்சனம்!

மைக்கேல் திரைவிமர்சனம்


சந்தீப் கிஷன், திவியான்ஷா கௌசிக், வரலக்ஷ்மி, விஜய்
சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், வருன் சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் சாம்.சி.எஸ் இசையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மைக்கேல்.

மும்பையில் பிரபல தாதா கெளதம் வாசு தேவ் மேனன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இருந்தும் இவருக்கு மேலும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் முதல் மனைவி தனது கணவனின் காதலியை கொலை செய்கிறாள் கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண் அங்கு இருந்து தப்பித்துவிடுகிறார். அவருக்கு குழந்தை பிறக்கிறது அதுதான் சந்தீப் கிஷன். இறுதியில் தனது தந்தையை பழி வாங்கினாரா இல்லையா என்பதே மைக்கேல்.

சுதீப் கிஷன் தமிழில் அறிமுகம் ஆனாலும் அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை அதற்கான போராட்டம் தான் இந்த படம் என்று சொல்லலாம். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளார். நடிப்பிலும் சரி சண்டை காட்சிகளிலும் சரி மிக கன கச்சிதமாக செய்துள்ளார். படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் அற்புதமான முறையில் வடிவமைத்துள்ளார் இயக்குனர். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். ஆனால் சமீபத்தில் பார்த்த விக்ரம், கேஜிஎப் போன்ற படங்களின் சாயல் இதில் அப்பட்டமாக தெரிவது மைனஸ்.

நாயகியாக வரும் திவ்யாயான்ஷா தமிழில் முதல் படம் அழகு நடிப்பில் ஜொலிக்கிறார்.

கெளதம் வாசு தேவ் மேனன் படத்தில் வில்லன் அவரின் தோற்றமும் அவரின் குரலும் கதாபாத்திரத்துக்கு முழுமை சேர்க்கிறது. ரியல் தாதாவை நம் முன் நிறுத்துகிறார்.

விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் வருகிறார் அவரின் மனைவியாக வரலக்ஷ்மி. சிறிது நேரமே வந்தாலும் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் தோற்றம் மற்றும் சண்டைக்காட்சிகள் சிறப்பு.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் படத்தின் பலம் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி மிக அற்புதம் குறிப்பாக நாயகி அறிமுக காட்சியில் வயலின் பின்னணி இசை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி காதலையும் திரில்லரையும் எப்போதும் கலந்து கொடுப்பவர். இதிலும் அதை குறைவைக்காமல் கொடுத்துள்ளார். இதில் கொஞ்சம் தாய் பாசத்தை கலந்து கொடுத்துள்ளார்.கதை ஏற்கனவே பார்த்த கதை என்றாலும் திரைக்கதையில் பாஸ் மார்க் வாங்குகிறார். சில படங்களின் காட்சிகளாக இருந்தாலும் படத்தின் வேகமும் காட்சியமைப்பு நம்மை அதை எல்லாம் மறக்க வைக்கிறது. இயக்குனரின் காதல் ரசனை அருமை அதனை மிக அழகாக வெளிப்படுத்து உள்ளார். நாயகி அழகுக்கு ஏற்ப காதல் காட்சிகள் மிகவும் அழகாக காட்சி படுத்தியுள்ளார்.

மைக்கேல் பல இடங்களில் குறிப்பிட்ட ஒரு படத்தை நமக்கு அடையாளப்படுத்தினாலும் திரைக்கதை அதை மறைத்து ஒரு நல்ல படத்தை பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments