மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!(78)
மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!(78)
![]()
இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக விளங்கிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்.
1974-ல் முதல்முறையாக தீர்க்கசுமங்கலி ௭ன்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஹிந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழி பாடங்களை பாடி பிரபலமானார். மொத்தம் ஆயிரம் படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 3 முறை தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வாணி ஜெயராம் பூட்டிய வீட்டில் நெற்றியில் காயத்தோடு சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டு உறங்கிய நிலையில், இன்று காலை வீட்டில் வேலை செய்யும் பெண் காலை 11 மணியளவில் வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளார்.
நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சகோதரி உமாவிடம் தெரிவித்துள்ளார்.
அவரிடம் உள்ள வேறு ஒரு சாவியை திறந்து பார்த்த போது உள்ளே நெற்றியில் காயத்தோடு சடலமாக கிடந்துள்ளார்.
உடலை கைப்பற்றிய ஆயிரம் விளக்கு போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுக்கையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

