மஹத் நடித்துள்ள எமோஜி வெப் சீரிஸ் விமர்சனம்!
மஹத், தேவிகா சதீஷ், மானசா சௌத்ரி ஆகியோர் நடிப்பில்
ஆஹா OTT வெளிவந்து இருக்கும் வெப் சீரிஸ் எமோஜி. இதன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
நடிகர் சிம்புவின் நண்பரான மஹத். இந்த எமோஜி தொடரின் மூலம் ஓடிடி உலகிற்குள் நுழைந்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன மஹத் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். இவருக்கும் மானசா சௌத்ரிக்கும் காதல் மலருகிறது. ஆனால் விஜயின் பிரியமானவர்களே படத்தில் கல்யாணத்திற்கு கண்டிஷன் போடுவது போல் இதில் காதலுக்கு கண்டிஷன் போடுகிறார் காதலி. இருவரது காதலும் நன்றாக சென்று கொண்டு இருக்கும்போது மானசாவுக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்கிறது. இதனால் கண்ணீரில் கரையும் மஹத்துக்கு நண்பராகிறார் எதிர்வீட்டு பெண்ணான தேவிகா சதீஷ். இருவருக்கும் காதல் மலர திருமணமும் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த திருமண பந்தமும் நிலைக்கவில்லை. அதனால் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கின்றனர். இறுதியில் விவாகரத்து பெற்றார்களா ? இல்லையா? என்பதை இளமை துள்ள துள்ள இயக்கியுள்ளார் இயக்குனர் ரங்கசாமி.
தொடரின் மிகப் பெரிய பலம் என்று சொன்னால் அது இயக்குனர் காலத்துக்கு ஏற்ப கதைக்களம் அற்புதமான திரைக்கதை என இதற்கு உயிர் கொடுத்து இருக்கும் மஹத் மற்றும் இரண்டு நாயகிகள் அழகிலும் சரி நடிப்பிலும் நம்மை சுண்டி இழுக்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியான திருமணமான தம்பதியைச் சுற்றி சுழலும் ஒரு உணர்ச்சிபூர்வமான காதல் கதையாகும்.
தென்காசி, நாகர்கோவில், ஹைதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளில் வெப் சீரிஸ் படமாக்கப்பட்டுள்ளது. சென்.எஸ்.ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குநராக வனராஜ், ஆர்.எச். விக்ரம் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். காதல், காமம் கலந்த இளமை துள்ளலுடன் இயக்கியுள்ளார். கதாநாயகிகள் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் கிளுகிளுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் அத்தனை உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது இந்த எமோஜி.

