ஆர்யன் திரைப்பட விமர்சனம்!

ஆர்யன் திரைப்பட விமர்சனம்!

பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தின் விமர்சனம் இதோ..

படத்தோட தொடக்கத்தில் ஒரு டிவி சேனலின் நேரடி ஒளிபரப்பின்போது உள்ளே நுழையும் செல்வராகவன், அடுத்தடுத்த நாட்களில் 5 பேரை கொலை செய்யப்போவதாக சொல்கிறார். அதன்படியே ஒரு கொலையும் நடக்கிறது..அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஊடகங்கள் வழியாக தோன்றி இன்னும் சிலரை கொல்லப்போவதாக சொல்ல அதன்படியே அடுத்தடுத்து கொலைகளும் நடக்கிறது.. இதனை துப்பறிந்து கண்டுபிடிக்கும் அதிகாரியாக வரும் விஷ்ணு விஷால், அனைத்து கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? மேலும் கொலைகள் நிகழாமல் தடுத்தாரா? என்பதே மீதிக்கதை…

விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. க்ரைம் த்ரில்லர் கதைகள் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல் திறம்பட செய்துள்ளார்.. தொடர் கொலைகளை தடுக்க முடியாமல் தவிப்பது.. ஆக்ரோஷமாக சண்டையிடுவது என திரையில் மிளிர்கிறார்.. இரண்டு நாயகிகளில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு குறிப்பிடும் படியான கதாபாத்திரம் அவரும் பிசகாமல் நன்றாக செய்துள்ளார்.. மற்றொரு நாயகி மானசா அழகாக இருக்கிறார்..ஆனால் அவருக்கு படத்தில் அதிகம் வேலையில்லை..

வில்லனாக வரும் செல்வராகவன் தன்னுடைய ட்ரேட் மார்க் நடிப்பை கொடுத்துள்ளார். தன் கொலைகளுக்கான நியாயத்தை சொல்லும்போது அனுதாபம் வரவழைக்கிறார்.. வழக்கமான க்ரைம் த்ரில்லர் படங்களை போல் தொடங்கினாலும் அதன்பிறகு அடுத்தடுத்து வரும் காட்சிகள் படத்தின் வேகத்தை கூட்டி அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.. தொடர் கொலைகள், கொலைக்கான காரணம் என்ன?, என ஆடியன்ஸ் யூகிக்காத வகையில் சொன்ன விதத்தில் பிரவீன் கே மற்றும் மனு ஆனந்தின் திரைக்கதை ரசிக்க வைக்கிறது.. கிளைமாக்ஸில் ஒரு நல்ல சமூக கருத்தையும் திணிக்காமல் வைத்து ரசிக்க வைத்துள்ளனர்.. வசனங்களும் நன்றாக உள்ளது..

ஒரு இன்வெஸ்டிகேஷன் படத்திற்கு எந்த மாதிரியான பின்னணி இசை தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார் ஜிப்ரான். ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் தேர்ந்த காட்சியமைப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார். மொத்தத்தில் ஒரு முன்னணி நடிகரை வைத்து இன்றைய காலத்திற்கு தேவையான சமூக கருத்தை அழகாக சொன்ன விதத்தில் ஈர்க்கிறான் இந்த ஆர்யன்.. ரேட்டிங் 4/5..

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments