பராசக்தி திரைப்பட விமர்சனம்!

பராசக்தி திரைப்பட விமர்சனம்!

பராசக்தி.. இந்த படத்தோட கதை என்னன்னா?.. படத்தோட ஹீரோ சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிரா புறநானூறு அப்படிங்கற குழு அமைச்சு போறாடிட்டு இருக்காரு.. படத்தோட ஆரம்பத்துல இந்த குழு ஒரு ரயிலை எரிக்குறாங்க..மத்திய அரசு நியமிச்ச அதிகாரியான ரவி மோகன் இந்த குழுவ பிடிக்க துடிக்கிறாரு.. எந்த எல்லைக்கும்‌போய் சிவகார்த்திகேயன் குழுவ அழிக்கனும்னு ரவி மோகன் நினைக்குறாரு.. இந்த நிலையில சிவகார்த்திகேயனோட நண்பர் ஒருவர் அந்த ரயில் எரிப்புல இறந்து போறாரு..
இதுனால இனி இந்த வன்முறை, எதிர்ப்பு எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு வேலைக்கு போய்டுறாரு.. சில வருஷத்துக்கு அப்புறமா நாயகன் சிவகார்த்திகேயனோட தம்பி அதர்வா இந்தி திணிப்புக்கு எதிரா நாயகி ஸ்ரீலீலா உள்ளிட்ட மாணவர்களோட சேர்ந்து போராடிட்டு இருக்காரு.. சிவகார்த்திகேயன் ரயில்வே வேலைக்காக இன்டர்வியூக்கு போன இடத்துல இந்தி சரியா பேச தெரியலனு வேலை கிடைக்காம போய்டுது.. இந்த பிரச்சினையில இளைஞர் ஒருவர் உயிரிழக்க, சிவகார்த்திகேயன் மீண்டும் போராட்டத்தை கையில எடுக்குறாரு.. அப்புறம் என்ன ஆச்சு அப்படிங்கறதுதான் கதை..

நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்.. செழியன் அப்படிங்கற கேரக்டராகவே வாழ்ந்திருக்காரு.. போராட்டம்‌ தான் வாழ்க்கை எப்படிங்கற சூழல் வரும் போது சிவகார்த்திகேயன் எடுக்கும் முடிவுகள், நடிப்பு என அடுத்த கட்டத்துக்கு போய் இருக்காரு. ஸ்ரீலீலா கூட ரொமான்ஸலயும் கலக்கி இருக்காரு..

படத்துல மிகப் பெரிய ப்ளஸ் ரவி மோகன்தான். படம் முழுக்க அரசுக்கு ஆதரவான‌ அதிகாரியா, ஈவு இரக்கமில்லாத நபரா மிரட்டி இருக்காரு.. கொடூரமான வில்லனா ரசிக்க வெச்சிருக்காரு.. இவரோட முடிவுல தனி ஒருவர் டச்.. அதர்வா பாசமுள்ள தம்பியா, எழுச்சி மிக்க மாணவராக சூப்பரான நடிப்ப கொடுத்திருக்காரு.. ஸ்ரீலீலாவுக்கு தமிழ்ல நல்ல அறிமுக படமா இது அமஞ்சிருக்கு.. ஆரம்பத்துல கொஞ்சம் சலிப்ப ஏற்படுத்தினாலும் கிளைமாக்ஸ்ல நல்லா ஸ்கோர் செஞ்சிருக்காங்க..

படத்துல நடிச்சிருக்கற‌ பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்டவங்க நடிப்பும் நல்லா இருக்கு.. இந்தி திணிப்புக்கு எதிரான படம் அப்படிங்கறதால வரலாற்று சம்பவங்கள கொஞ்சம் கற்பனை கலந்து எடுத்திருக்காங்க.. ஆர்ட் ஒர்க் நம்மள அந்த காலத்துக்கே கொண்டுபோய்டுது.. வசனங்களும் அருமையா இருக்கு..

படத்துக்கு இன்னொரு பலம்னா அது ஜிவி பிரகாஷ் குமாரோட மியூசிக்தான்.. பாடல்கள் அருமையா இருந்தாலும் பின்னணி இசையில தன்னோட ஆளுமைய நிரூபிச்சிருக்காரு.. அட்டகாசமான பின்னணி இசை படத்தை இன்னும் பலமாக்கி இருக்கு.. ஒளிப்பதிவும் நல்லா இருக்கு..

அரசியல்ரீதியா கொண்டுபோகாம முழுக்க முழுக்க மாணவர்களோட புரட்சியா கொண்டுபோய் ரசிக்க வெச்சிருக்காங்க இயக்குனர் சுதா கொங்கரா.. ஆனா முதல் பாதி ரொம்பவும் மெதுவா போகுது.. இரண்டாம் பாதி சூப்பரா கொண்டுபோய் முடிச்சிருக்காங்க.. வசனங்களுக்கு மியூட் போட்டிருந்தாலும் எல்லாருக்கும் புரியுது. நாங்க இந்தி மொழிக்கு எதிரி அல்ல, இந்தி திணிப்புக்குத்தான் எதிரி அப்படின்னு சரியான திரைக்கதை மூலமா அழுத்தமா சொல்லி ரசிக்க வெச்சிருக்காங்க இயக்குனர்.. மொழி அரசியல சொன்ன விதத்துல இந்த பராசக்தி வெற்றி பெற்றிருக்கு.. மொத்தத்துல பராசக்தி.. தீ பரவட்டும்..

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted