எப்படி இருக்கிறது தண்டட்டி – திரை விமர்சனம்!

தண்டட்டி திரை விமர்சனம்!

பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் என்றாலே கொஞ்சம் வலுவான கதையும் அர்த்தமுள்ள கதையாக தான் இதுவரை நாம் பார்த்து ரசித்து வந்தோம் அந்த வகையில் இந்த படமும் அப்படி ஒரு சிறந்த படம் என்று கூறலாம். ஒரு ஆழமான அழுத்தமான காதலை அற்புதமான திரைக்கதையுடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் தண்டட்டி.

இந்த படத்தில் ரோகிணிக்கு நான்கு மகள் , இரண்டு மகன்கள் ஒரு மகன் இறந்து விடுகிறார். இன்னோரு மகனான விவேக் பிரசன்னா குடிகாரன். நான்கு மகள்களும் அம்மாவை பிடிங்கி தின்பவர்கள். எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு கடைசியாக அவரது காதில் இருக்கும் தண்ட்டியை குறிவைக்கின்றனர். இதனால் ரோகிணி வீட்டை விட்டு ஓடிப் போகிறார். போலீஸ் ஸ்டேஷன் செல்லும் அவரது வாரிசுகள் அம்மாவை கண்டுபிடிக்க வேண்டும் என்று புகார் தருகின்றனர். ஆனால் அந்த ஊரே போலீசை மதிப்பதே இல்லை. மீறி ஊருக்குள் வரும் போலீசை அடித்து துரத்திவிடுவார்கள். இந்த பிரச்சினையில் போலீஸ் கான்ஸ்டபிள் பசுபதி சிக்கிக் கொள்கிறார். இறுதியில் பாட்டி கிடைத்தாரா? தண்டட்டி பின்னால் இருக்கும் கதை என்ன? பசுபதி தப்பித்தாரா ? என்பதை காமெடி கலந்து சொல்ல முயன்றுள்ளார் அறிமுக இயக்குனர் ராம் சங்கையா.

போலீஸ் கான்ஸ்டபிளாக பசுபதி. பாட்டி காணாமல் போன வழக்கை விசாரிக்க போய் ஊர்மக்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் கதாபாத்திரம். நன்றாக நடித்துள்ளார். பாட்டியாக ரோகிணி சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். இவரது இளம்வயது கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி வருகிறார். தாழ்த்தப்பட்ட இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவரை அடித்து கிணற்றில் தூக்கி எறிந்துவிடுகின்றனர் உறவினர்கள். இதனால் மனமுடைந்த அவர் கட்டாயத்தின் பேரில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். காலம் கடந்தபிறகு தனக்கு பிறந்த பிள்ளைகளே பிடிங்கி தின்பதை நினைத்து கலங்கும் இடங்களில் ரோகிணி ஈர்க்கிறார். மகனாக விவேக் பிரசன்னா‌. ஊரில் ஒரு குடிகாரன் இருந்தால் எப்படி இருப்பானோ அப்படியே இருக்கிறார். மகள்களாக நடித்துள்ளவர்களில் தீபா வழக்கம் போல வெளுத்து வாங்கியுள்ளார். பேரனாக நடித்துள்ள‌ முகேஷ் கவர்கிறார். ஒரு கிராமத்து கதையை இயல்பு மாறாமல் கொடுக்க முயன்றுள்ள இயக்குனரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் அருமையான படமாக வந்து இருக்கும். முதல் பாதியில் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. கிளைமாக்ஸ் காட்சி கண்கலங்க வைத்துள்ளது. ஆனால் அதற்காக முழு படத்தையும் கொஞ்சம் பொறுமையாக கடக்க வேண்டியுள்ளது. பாடல்கள் எதுவும் ஒட்டவில்லை. கேமரா நன்றாக உள்ளது. மொத்தத்தில் தண்டட்டி – வெண்கலம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments