லீடர் திரைப்படம் விமர்சனம்!
லீடர் திரை விமர்சனம்
துரை செந்தில்குமார் இயக்கத்துல லெஜெண்ட் சரவணன் நடிச்சிருக்கற லீடர் படத்தோட விமர்சனத்தை பாக்கலாம்..

தூத்துக்குடில நம்ம ஹீரோ லெஜெண்ட் சரவணன் மெக்கானிக் கடையில மெக்கானிக்கா வேலை செஞ்சிட்டு இருக்காரு.. அவருக்கு மகள் தான் எல்லாமே.. இந்த நிலையில தூத்துக்குடி துறைமுகத்துல சட்டத்துக்குப் புறம்பான செயல்கள்ல ஒரு ரவுடி குரூப் செஞ்சிட்டு இருக்காங்க.. அதை தடுக்க இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சி செய்யறாங்க.. இந்த கும்பலுக்கும் போலீசுக்கும் நடக்குற சண்டையில் அப்பாவியான சரவணன் உள்ள சிக்கிடுறாரு.. ஒரு கட்டத்துல இந்த பிரச்சினைக்கு எல்லாம் சரவணன் தான் காரணம் அப்படின்னு போலீஸ் கண்டுபிடிக்குது.. சரவணன் யாரு.. எதுக்காக இப்படி செஞ்சாரு. ரவுடி கும்பலோட தலைவனுக்கும் ஹீரோவுக்கும் என்ன பிரச்சினை என அனைத்துக்கும் விடை சொல்றதுதான் லீடர் படம்..
ஹீரோ சரவணனோட முதல் படம் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டலையும் ஏற்படுத்துச்சு.. இதுக்கு எல்லாத்துக்கும் இந்த படத்துல பதில் சொல்லியிருக்காரு.. பாசமான அப்பாவா, எதிரிகள பந்தாடுற ஹீரோவா மாஸ் காமிச்சிருக்காரு. ஒரு இயக்குனர் நெனச்சா யார வேணாலும் நடிக்க வைக்க முடியும்னு இந்த படம் ப்ரூவ் பண்ணுது. ஆக்ஷன்ல கலக்கியிருக்காரு லெஜெண்ட் சரவணன்.. முந்தைய படத்துக்கும் இந்த படத்துக்கும் ஏகப்பட்ட முன்னேற்றம்.. நடிப்புல பெருசா ஒன்னும் இல்ல அப்படினாலும் சொதப்பாம இருந்ததே ஆச்சர்யம்தான். மாஸ் ஹீரோவா ஜெயிட்டுட்டாருன்னே சொல்லலாம்..
எஸ்பியாக ஷாம் நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு..ஆண்ட்ரியாவும் தன்னோட வேலைய கச்சிதமா பண்ணியிருக்காங்க.. வில்லன் சந்தோஷ் பிரதாப் நடிப்பும் அவர் சம்பந்தமான ட்விஸ்ட்டும் சூப்பர். விடிவி கணேஷ், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா படத்துக்கு உறுதுணையா இருந்திருக்காங்க.. நாயகி பாயல் ராஜ்புத் நடிப்பு மட்டுமில்லாம ஆக்ஷன்ல அசத்தியிருக்காங்க..
வெங்கடேஷோட ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்துல இருக்கு.. ஆக்ஷன் காட்சிகளும் கிளைமேக்ஸ் ரயில் சண்டையும் பயங்கரமா இருக்கு.. பிரதீப் ராகவோட எடிட்டிங் கச்சிதம்.. ஜிப்ரான் இசையில பாடல்கள் ஓகே ரகம் தான் .. ஆனா பின்னணி இசையில அதகளம் பண்ணியிருக்காரு..
இயக்குனர் துரை செந்தில்குமார் ஒரு முன்னணி நடிகர வெச்சு எடுக்க வேண்டிய படத்த சரவணன வெச்சு எடுத்த தைரியத்துக்கு பாராட்டுகள்.. சரவணன் கிட்ட இருக்கற ப்ளஸ் மற்றும் மைனஸ மனசுல வெச்சுகிட்டு அதுக்கு ஏத்த வேலைய வாங்கியிருக்காரு.. கதையாகவும் திரைக்கதையாவும் பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலுமே நிறைய ட்விஸ்ட் கலந்து பரபரப்பான ஆக்ஷன் படத்த கொடுத்திருக்காரு.. முதல் பாதி பரபரப்பா போகுது.. இரண்டாம் பாதியில வரற பிளாஷ்பேக் சீன்ஸ் கொஞ்சம் சலிப்ப கொடுத்தாலும் கடைசி அரை மணி நேரம் விறுவிறுப்பா இருக்கு.. மொத்தத்துல லீடர்.. தலைவன்..

