கட்டில் திரை விமர்சனம்!

கட்டில் திரை விமர்சனம்!


இ.வி.கணேஷ்பாபு தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் கட்டில். நாம் ஒவ்வொருவரும் தனது வாழ்வில் சொந்த வீட்டிலோ வாடகை வீட்டிலோ நீண்ட வருடங்களாக ஒரு பொருளை‌ பயன்படுத்தி வருவோம்.‌ நமது அப்பா, தாத்தா பயன்படுத்திய பொருட்களை மீது மிகவும் ஆசையாகவும் அவர்களது நினைவாகவும் பயன்படுத்தி வருவோம் அல்லவா. அதுபோல இப்படத்தின் நாயகன் மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த கட்டில் மீது வைத்துள்ள அன்பும் அது பறிபோகும் சூழல் வரும் போது அதற்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் கட்டில் படத்தின் கதை.

கணேஷ் பாபு தனது கர்ப்பிணி மனைவி, மகன், அம்மாவுடன் வாழ்ந்து பாரம்பரியமான பெரிய வீட்டில் வருகிறார். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்த இவர் நூல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். பாரம்பரிய வீட்டை அவரது சகோதரர்கள் வீட்டை விற்க முடிவெடுக்கின்றனர்.‌ ஆனால் 200 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டிலை தானே எடுத்துக் கொள்வதாக கேட்கிறார்.‌ வீட்டை விற்றபிறகு இந்த கட்டிலை வைக்க உடனடியாக வேறு பெரிய வீடு வாங்க நினைக்கிறார். அதுவரை கட்டிலை இந்திரா சவுந்தரராஜன் நடத்தி வரும் கடையில் வைக்கிறார். வீடு வாங்கி கட்டிலை கொண்டு சென்றாரா? கட்டிலுக்கு என்ன ஆனது? என்பதே கதை.

கணேஷ் பாபு வாழ்ந்த கெட்ட குடும்பத்தின் கடைசி பையனாக நடித்துள்ளார். நடிப்பு நன்றாக உள்ளது.‌ மூன்று தலைமுறை கதாபாத்திரமாக இவரே நடித்துள்ளார். இவரது மனைவியாக சிருஷ்டி டாங்கே ஆர்பாட்டமில்லாத நடிப்பை கொடுத்துள்ளார். சென்டிமென்ட் காட்சிகளில் சற்று மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது. அம்மாவாக கீதா கைலாசம் அனுபவமிக்க நடிகை போல் நடித்துள்ளார். மகனாக நடித்த சிறுவனின் நடிப்பும் நன்று. விதார்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது. வைரமுத்து வரிகளில் பாடல்கள் நன்று. பின்னணி இசையில் கொஞ்சம் நாடகத்தன்மை எட்டிப்பார்க்கிறது. படம் மெதுவாக நகர்வது போல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் பயன்படுத்தும் பாரம்பரியமான பொருட்கள் மீது உள்ள பாசத்தை சொல்ல முயன்றுள்ள இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். இரண்டாம் பாதியை இன்னும் சரி செய்திருந்தால் இந்த கட்டில் நல்ல படமாக வந்திருக்கும். மொத்தத்தில் கட்டில் – தள்ளாட்டம். ரேட்டிங் – 3/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments