கருப்பு திரைப்பட விமர்சனம்!

கருப்பு திரைப்பட விமர்சனம்!

கருப்பு.. இந்த படத்தோட கதை என்னன்னா.. கேரளாவுல இருந்து தன்னோட பொண்ணு ஆபரேஷனுக்காக 60 சவரன் நகையை எடுத்துட்டு சென்னை வர்றாரு இந்திரன்ஸ்.. வந்த இடத்துல நகை திருடு போகுது. அந்த நகைகள போலீஸ் கண்டுபிடிச்சு கொடுக்குறாங்க.. ஆனா 60 சவரனுக்கு பதிலா 45 சவரன் தான் திருப்பி கிடைக்குது அதையும் கோர்ட்ல தான் நீங்க திருப்பி வாங்கனும்னு போலீஸ் சொல்லிடுறாங்க.. இந்த வழக்க ஆர்ஜே பாலாஜி எடுத்து நடத்துறாரு.. ஊழல் பேர்வழியான அவரு வழக்க சீக்கிரம் முடிக்காம இழுத்தடிச்சுகிட்டே இருக்காரு.. இதுனால மனம் நொந்துபோன இந்திரன்ஸ் கோர்ட் வளாகத்துல இருக்கற கருப்புசாமி சிலைகிட்ட கண்ணீர் மல்க முறையிடுறாரு. கருப்புசாமியான சூர்யா என்ட்ரி கொடுக்குறாரு.. ஆர்ஜே பாலாஜிக்கு தண்டனை கொடுக்க போகும் போது அவரு சூர்யா கிட்ட இங்க எதுவும் மாறாது நீ வேணா வந்து மாத்திக்காட்டு அப்படின்னு சவால் விடுறாரு.. ஆர்ஜே பாலாஜியோட சவால ஏத்துக்கிட்டு சாதாரண மனுஷனா கோர்ட்டுக்கு வர்றாரு.‌ மனுஷனா வந்த கருப்பு ஆர்ஜே பாலாஜியோட சவால்ல ஜெயிச்சாரா.. சாமானியர்களுக்கு நீதி கெடச்சுதா அப்படிங்கறதுதான் கருப்பு..

ரொம்ப நாளைக்கு அப்புறமா சூர்யா செம்ம எனர்ஜியோட திரும்பி வந்திருக்காரு.. ரசிகர்கள் என்ன தேவையோ அதை கச்சிதமா செஞ்சி குஷிபடுத்திருக்காரு..எமோஷனல், சண்டை, ஸ்டைல், சர்ப்ரைஸ் என்ட்ரிஸ் என மிரட்டியிருக்காரு. நிச்சயமா சூர்யாவுக்கு இது கம்பேக்தான்..

த்ரிஷா படத்துல சூர்யாவுக்கு ஜோடி இல்ல.. ஆனாலும் தன்னோட வேலையை நல்லா பண்ணியிருக்காங்க.. மலையாள நடிகர் இந்திரன்ஸ் தன்னோட அனுபவ நடிப்பால அசத்தியிருக்காரு.. மகளோட உயிர காப்பத்த நினைக்குற அப்பாவா கலங்க வெச்சிருக்காரு..

அனகா, ஷிவதா, நட்டி நட்ராஜ் எல்லாருமே தங்களோட கேரக்டர சிறப்பா பண்ணியிருக்காங்க..
ஆர்.ஜே. பாலாஜி வில்லனா கலக்கியிருக்கிறாருன்னே சொல்லலாம்.. மோசமான அட்வகேட்டா எரிச்சல் வரவெச்சிருக்காரு..

ஜி.கே.விஷ்ணுவோட ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலமா அமச்சிருக்கு.. சாய் அபயங்கரோட இசையில பாடல்களும் பின்னணி இசையும் படத்தோட மிகப் பெரிய ப்ளஸ்ஸா இருக்கு..

இயக்குனராக ஆர்ஜே பாலாஜி, சூர்யா ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பா செஞ்சிருக்காரு.. கோர்ட் அப்படிங்கறது தப்புக்கு தண்டனை வாங்கி தர இடம் ஆனா கோர்ட்டுக்கு வர்றதே இங்க தண்டனை தான் அப்படின்னு சொல்ற வசனம் நல்லா இருந்துச்சு.. இரண்டாம் பாதியில அங்கங்க தொய்வு இருந்தாலும் ஒட்டுமொத்தமா பார்த்தா சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்துன்னே சொல்லலாம்..‌ மத்தவங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.. மொத்தத்துல கருப்பு. படையல்..

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments