2000 கோடி பந்தயம் அடிக்குமா கங்குவா? – திரை விமர்சனம்!

2000 கோடி பந்தயம் அடிக்குமா கங்குவா? – திரை விமர்சனம்!

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. படத்தின் தயாரிப்பாளர் தொடங்கி ஒளிப்பதிவாளர் வரை அத்தனை பேரும் படத்தை பற்றி ஹைப் ஏற்றியிருந்தனர்‌. அதனை எல்லாம் நிஜமாக்கியதா படம் வாங்க பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி சூர்யா கோவாவில் ஒரு பவுண்டி ஹண்டராக இருக்க, கே எஸ் ரவிகுமார் சொல்லும் வேலைகளை செய்து வருகிறார், அப்போது ஒரு சிறுவன் சூர்யாவிடம் வர, அவனை தேடி மிகப்பெரிய ரஷ்யா கும்பல் ஒன்று வருகிறது. அவர்கள் அந்த சிறுவனை வைத்து ஏதோ எக்ஸ்பிரிமெண்ட் செய்து வருகின்றனர், அந்த சிறுவனை ரஷ்யா கும்பல் தூக்கி செல்ல, அங்கிருந்து கதை கற்காலத்திற்கு செல்கிறது. 5 நிலங்கள் கொண்ட ஒரு ஊரில், ரோமானிய அரசன் அந்த 5 நிலங்களை கைப்பற்ற நினைக்க, போஸ் வெங்கட்டை வைத்து 5 நிலங்களை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்.

போஸ் வெங்கட் பெருமாச்சி, அராத்தி நிலத்திற்கும் எப்படியோ சகுனி வேலை பார்த்து சண்டை மூட்டிவிட, பிறகு பெரிய போர் உருவாகிறது. இந்த போரில் வெற்றி யாருக்கு, நிகழ் காலத்தில் அந்த சிறுவன் என்ன ஆனான், என்பதே மீதிக்கதை. கதையாக பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை திரைக்கதையாக சொன்ன விதத்தில் சிவா நம்மை ஏமாற்றிவிட்டார்.

படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகப் பெரிய பலம்.தனி ஒருவனாக படத்ததை தூக்கி சுமக்கிறார். பெருமாச்சி பழங்குடியின தலைவனாக அதகளம் செய்துள்ளார். தற்காலத்தில் வாழும் பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜாலி சூர்யாவை பார்க்க முடிகிறது. ஆனால் சூர்யாவை தவிர படத்தில் யாருக்கும் வேலையில்லை.

வெற்றியின் கேமிரா அற்புதம் செய்துள்ளது. படத்தின் பலம் அதன் டெக்னிக்கல் டீம் தான். விஎஃப்எக்ஸ் நன்றாக உள்ளது. எடிட்டிங் ஏற்கனவே பார்த்து பழகிய திரைக்கதையால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இடைவேளை மற்றும் இறுதி சண்டைக் காட்சிகள் நன்று. மொத்தத்தில் தமிழில் மற்றுமொரு புதிய முயற்சியாக கங்குவா தொங்கி நிற்கிறது. படக்குழுவினர் கொஞ்சம் பேச்சை குறைத்திருந்தாலே ஏதாவது மிஞ்சியிருக்கும். தற்போது அதற்கும் வழியில்லை. மொத்தத்தில் கங்குவா – கவரவில்லை. ரேட்டிங் 3/5.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments