பரத்துக்கு வெற்றி கொடுத்ததா “மிரள்” – திரைப்பட விமர்சனம்!

 

நடிகர் பரத் நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் சமீப காலமாக தொடர்ந்து அவரது படங்கள் சோபிக்கவில்லை. இதனால் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்று அழைத்துக் கொண்டு இருக்கிறார்.

அப்படி இயக்குனர் சக்திவேலை நம்பி பரத் களமிறங்கியுள்ள படம்தான் மிரள். வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

காதல் திருமணம் செய்து கொண்டு பரத் – வாணி போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.

குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில் வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதை ஹாரர் திரைக்கதை மூலம் கூற முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

இந்தப் படத்தின் தொடக்கம் நல்ல வகையிலேயே அமைந்துள்ளது. குறைந்த நபர்கள், அவர்களை சுற்றி நடக்கும் மர்மங்கள் என முதல் பாதி நகர்கிறது. இரண்டாம் பாதியில் கதை தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. இது பேய் படமா த்ரில்லர் படமா என்ற சந்தேகத்துடனே ரசிகர்கள் படத்தை பார்க்க வேண்டி உள்ளது. அதுவும் பேய்க்கு போடப்பட்டிருக்கும் மேக்கப் எல்லாம் சிரிப்பை வரவழைக்கிறது. வித்தியாசமான கதையை தேர்வு செய்த இயக்குனர் திரைக்கதையை சரியாக அமைக்கவில்லை. பரத்தும் வாணி போஜனும் முடிந்த வரை தங்களது அனுபவ நடிப்பால் படத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். கேஎஸ்.ரவிக்குமார் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆக தனது கொடுக்கப்பட்ட பணியை செய்துள்ளார். நண்பராக வரும் ராஜ்குமாரின் நடிப்பு ஓகே. பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம். மொத்தத்தில் பரத்தின் நீண்டகால போராட்டத்திற்கு இப்படம் கொஞ்சம் ஆறுதல் தருவதாக உள்ளது.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments