“ஆண் பாவம் பொல்லாதது” திரை விமர்சனம்!

ஆண் பாவம் பொல்லாதது திரை விமர்சனம்!

ஆண் பாவம் பொல்லாதது.. நாயகன் ரியோவுக்கும் நாயகி மாளவிகா மனோஜுக்கும் பெற்றோர்களால பார்த்து திருமணம் நடக்குது.. திருமணத்துக்கு பிறகு ரெண்டு பேரும் நல்லாதான் குடும்பம் நடத்துறாங்க.. மாளவிகா தன்ன முற்போக்கு சிந்தனை உள்ள பெண்ணா காட்டிக்கிறாங்க..அதுனால ரியோவும் அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குறாரு.. ஆனா போகப்போக ரெண்டுபேருக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பிக்குக்குது.. இது விவாகரத்து வரை போய்டுது. விவகாரத்து கேட்டு கோர்ட்டுக்கு போறாங்க. அதுக்கப்புறம் என்ன‌ ஆச்சு? ரெண்டு பேருக்கும் விவாகரத்து கெடச்சுதா? இல்ல ரெண்டு பேரும் ஒன்னா சேந்தாங்களா அப்படிங்கிறதுதான் கதை..

ஜோ படத்தோட வெற்றியை தொடர்ந்து மறுபடியும் ரியோ, மாளவிகா மனோஜ் ஜோடி இந்த படத்துல இணஞ்சிருக்காங்க.. அந்த படத்துல எப்படி இருந்தாங்களோ அப்படியே தான் இதுலயும்.. ரியோ படத்துக்கு படம் நடிப்புல தன்ன மெருகேற்றிட்டு வர்றாரு.. அது படம் பார்க்கும் போதும் நமக்கு தெரியுது.. காதல், காமெடி, எமோஷனல் என நடிப்புல அடுத்த கட்டத்துக்கு போய் இருக்காரு.. இருவருக்கும் இடையில ஏற்படும் 5 சம்பவங்கள் படத்துல சொல்லியிருப்பங்க.. அது தியேட்டர்ல சிரிப்பலைய ஏற்படுத்தியிருக்கு.. மாளவிகா மனோஜ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்காங்க.. அழும்போது கூட அழகா இருக்காங்க.. பெண் சுதந்திரம், பெண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு நாயகி எடுக்கும் முடிவுகளால ஏற்படுற பிரச்சினைகள நாயகன் சமாளிக்க முடியாமல் தவிக்கற சீன்ஸ் நல்லா இருக்கு..

வக்கீலாக வரும் விக்னேஷ் காந்த், அவரோட உதவியாளர் ஜென்சன் திவாகர், எதிர்தரப்பு வக்கீல் ஷீலா என இவங்களோட நடிப்பும் படத்துக்கு பலமா இருக்கு..முதல்பாதி காமெடியா போய் இரண்டாம் பாதியில அளவான எமோஷனல் காட்சிகள அடுக்கு கணவன் மனைவி உறவுக்குள்ள இருக்குற பிரச்சினையை போரடிக்காம சொல்லியிருக்காரு இயக்குனர்.. சமுதாயத்துல குடும்பத்துக்காக ஆண்கள் படுற கஷ்டத்தையும் சொல்லி ரசிக்க வைக்குறாரு..

சித்து குமாரோட மியூசிக்ல பாடல்களும் பின்னணி இசையும் நல்லா இருக்கு.. மாதேஷ் மாணிக்கத்தோட ஒளிப்பதிவும் நல்லா இருக்கு.. கணவன் மனைவி சண்டை, ஆண்களுக்கு சமூகத்துல இருக்குற பிரச்சினை, பெண்ணியம் உள்ளிட்ட விஷயங்கள ரொம்பவும் பாடம் எடுக்காம கலகலப்பா சொல்லி தன்னோட முதல் படத்துலயே பாஸ் மார்க் வாங்குறாரு இயக்குனர்..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments