சட்டென்று மாறுது வானிலை திரை விமர்சனம்!
சட்டென்று மாறுது வானிலை திரை விமர்சனம்!
![]()
சட்டென்று மாறுது வானிலை.. இந்த படத்தோட கதை என்னன்னா.. ஆதரவற்றவரான நாயகன் ஜெய் ஐ.டி.கம்பெனில வேலை செய்யறாரு.. நாயகி மீனாட்சி கோவிந்தராஜனை பார்த்ததும் லவ் பண்றாரு.. நாயகி மினிஸ்டரோட பொண்ணு.. தனக்கு கட்டாய கல்யாணம் செய்ய நினச்ச அப்பாவ எதிர்த்திட்டு ஹாஸ்டல்ல தங்கி இருக்காங்க.. ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்குறாங்க.. ஹனிமூனுக்கு கொடைக்கானல் போறாங்க.. அங்க கருடன் ராம் நடத்தி வர்ற ரெசார்ட்ல தங்குறாங்க.. திரும்பி வந்த இருவருக்குள்ள சண்டை வந்திடுது.. அதே நேரத்துல கருடன் ராம் ரெசார்ட்ல ஏதோ மர்மம் இருக்கறத ஜெய் கண்டுபிடிக்கிறாரு.. ஒருபக்கம் நாயகியோட அப்பா நாயகிய தேட, நாயகி ப்ரண்ட் சொத்துக்காக அவர கல்யாணம் பண்ண துடிக்க, இத்தனை பிரச்சனைகளையும் நாயகன் ஜெய் எப்படி சமாளிச்சாருங்கறத த்ரில்லர் படமா கொடுத்திருக்காங்க..
ஜெய் வழக்கம்போல தன்னோட நல்ல நடிப்பை கொடுத்திருக்காரு.. காதல், எமோஷனல் சீன்ஸ்ல கவர்ந்திருக்காரு.. நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் அழகு மற்றும் அளவான நடிப்பால ரசிக்க வெச்சிருக்காங்க.. நம்பி வந்த கணவன் தன்னை புரிஞ்சுக்கலையேன்னு நினச்சு கலங்குற இடத்துல அவங்களோட நடிப்பு நல்லா இருக்கு..
யோகி பாபு, சத்யன், ஆதித்யா கதிர் கூட்டணி காமெடி பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க.. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்..
கருடன் ராம் வில்லத்தனத்துல மிரட்டி இருக்காரு.. அவரோட முடிவு அதிர்ச்சி அளிக்குது.. ரிச்சர்ட் எம் நாதனோட ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலமா இருக்கு.
எழுதி இயக்கியிருக்கற பாபு விஜய், ஒரு சாதாரண கதையை முடிஞ்ச வரைக்கும் விறுவிறுப்பா கொடுக்க நினச்சிருக்காரு.. ஆனாலும் திரைக்கதையில எதுவும் புதுசா இல்லாததால வழக்கமான படமா கடந்து போய்டுது.. இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்கள திரைக்கதையில சேர்த்திருந்தா ஓரளவுக்கு நல்ல படமா வந்திருக்கும்.. மொத்தத்துல சட்டென்று மாறுது வானிலை.. கத்தரி வெயில்..

