காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்!

காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்!

அமீன் பரீப் இயக்கத்துல சுபாஷ் செல்வம், முனீஸ்காந்த் நடிச்சிருக்கற காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸோட விமர்சனத்தை பாக்கலாம் வாங்க..

கிளை சிறைச்சாலை வார்டனாக இருக்குற முனீஷ்காந்த், குற்றவாளிகளை திருத்துறதுதான் ஜெயிலோட வேலை அப்படின்னு நம்புறாரு.. ஜெயில்ல நூலகம் ஒன்ன உருவாக்கி சின்ன சின்ன தப்பு பண்ணிட்டு வர்றவங்களுக்கு புக் கொடுத்து படிக்க சொல்றாரு.. அதே சிறையில காவலரா இருப்பவருதான் ஹீரோ சுபாஷ் செல்வம்.. இந்த நிலையில ஜெயில்ல இருக்கற கோயில இருக்குற உண்டியல் பணம் திருடு போகுது.. ஜெயில்லயே உண்டியல் பணம் திருடப்பட்ட செய்தி வெளியே தெரியறதுக்குள்ள பணத்த இருக்கற இடத்துலயே வைக்க ஹீரோ முயற்சி செய்யுறாரு.. அதுக்காக பேங்கல லோன் வாங்கி அந்த பணத்தை உண்டியல்ல போட ஹீரோ முயற்சிக்க அந்த பணத்தையும் திருடன் திருடிவிடுகிறான்.. கடன் வாங்குன பணத்த பறிகொடுத்த நாயகன் திருடன் யார் என்பதை கண்டுபிடித்து விடுகிறார்.. ஆனா திருடனை நிரூபிக்க ஆதாரம் இல்லாம தவிக்கிறாரு.. எப்படியாச்சு திருடனை ஆதாயத்தோட பிடிச்சு அவன்கிட்ட இருந்த பணத்தை பறிமுதல் செய்ய ஹீரோ முயற்சிக்குறாரு.. ஹீரோவோட இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா அப்படிங்கிறத காமெடியா சொல்ல முயற்சி செஞ்சிருக்கறதுதான் இந்த காக்கி சர்க்கஸ்..


சிறை கண்காணிப்பாளர் முனீஷ்காந்த், காவலர் சுபாஷ் செல்வம், திருடன் ராஜேஷ் மாதவன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுடன், சிறைச்சாலை கோவில் உண்டியலும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டு, அதற்கான ஒரு சுவாரஸயமான கதையோடு, அனைத்து அத்தியாயங்களையும் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சுவாரஸ்யம் என விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் அமீன் பாரிப்.

கதையின் நாயகர்களாக நடிச்சிருக்கற முனீஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வம் இரண்டு பேருமே நல்ல நடிப்பை கொடுத்திருக்காங்க.. முனீஷ்காந்த் தன்னுடைய உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்ற மாற்றி கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செஞ்சிருக்காரு.. குற்றவாளிகள அடிச்சு திருத்துறத விட படிச்சு திருத்துறதுதான் சிறந்தது அப்படிங்கற கொள்கையோட இருக்கற கதாபாத்திரத்த நல்லாவே பண்ணியிருக்காரு..

சுபாஷ் செல்வம் காமெடி மற்றும் காதல் கலந்த கேரக்டரை கச்சிதமா செஞ்சிருக்காரு.. திருடனை விரட்டி பிடிக்கிறதாகட்டும், கண்முன்னாடி இருக்கற திருடனை எதுவும் செய்ய முடியாத நிலையில தவிக்கிறதாகட்டும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்காரு.. நாயகியுடனான காதல் சீன்ஸ்ல அப்பாவி நடிப்புல கவர்ந்திருக்காரு..

திருடராக நடிச்சிருக்கற ராஜேஷ் மாதவன் அருமையான நடிப்ப கொடுத்திருக்காரு.. பணத்துக்காக திருடாம, பேருக்காக திருடி தன்னோட கேரக்டரோட சுவாரஸ்யத்த தக்க வெச்சிருக்காரு.. ஹீரோ கிட்ட தோத்துப்போக கூடாது அப்படின்னு அவர் எடுக்குற‌ முடிவு அவருக்கே ஆபத்தா முடியுற காட்சி சுவாரஸ்யமா இருக்கு..

கதாநாயகிகளா நடிச்சிருக்கற வின்சு ஷாம் மற்றும் கெளதமி ஆகியோர் தங்களோட வேலையை குறையில்லாம செஞ்சிருக்காங்க..
சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் என இதுல நடிச்சிருக்கற எல்லாருமே தங்களோட பங்களிப்ப நல்லா கொடுத்திருக்காங்க..

நீரஜ் ரவியோட ஒளிப்பதிவும் படத்துக்கு பலமா இருக்கு.. இசையமைப்பாளர் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர் தங்களோட முழு ஒத்துழைப்ப கொடுத்திருக்காங்க..

இயக்குனர் அமீன் பரீப் நடிகர்கள் கிட்ட நல்ல நடிப்பை வாங்கியிருக்காரு.. ஆனா திரைக்கதையில கோட்டை விட்டுட்டாருன்னே சொல்லலாம்.. முதல் ஆறு எபிசோடுகள் ஏனோதானோ அப்படின்னு சுவாரஸ்யம் இல்லாம‌ போகுது.. கடைசி இரண்டு எபிசோட்கள் ஆறுதலா இருக்கு.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்.. புத்தகத்தோட அருமைய சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துகள்.. நமக்கு ஈகோ அதிகமாச்சுன்னா அதிர்ஷ்டம் நம்மள விட்டு போய்டும் என்ற வசனம் நல்லா இருந்துச்சு.. மொத்தத்துல காக்கி சர்க்கஸ்.. காமெடி பஞ்சம்..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments