எப்படி இருக்கிறது விஜய் ஆண்டனியின் “ரத்தம்” – திரை விமர்சனம்!
ரத்தம் திரை விமர்சனம்
![]()
தமிழ்ப் படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஸ்கூப் வகை படங்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிஎஸ் அமுதன். அதற்கு பிறகு தமிழ்ப்படம் 2 இயக்கினார். தற்போது தனது பாதையில் இருந்து விலகி முற்றிலும் த்ரில்லர் வகை படமாக ரத்தம் படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
படத்தின் தொடக்கத்தில் ஒரு முன்னணி வார இதழ் அலுவகத்திற்குள் நுழையும் ஒருவன் அந்த நிறுவனத்தின் ஓனரின் மகனும் செய்தியாளருமான செழியனை என் தலைவனை பத்தி தப்பா எழுதுவியா என்று கேட்டுக்கொண்டே கொடூரமாக குத்திக் கொள்கிறான். மறுபுறம் முன்னாள் புலனாய்வு செய்தியாளரான விஜய் ஆண்டனி கல்கத்தாவில் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். மனைவி இறந்துவிட்டதால் குடிக்கு அடிமையாகி விடுகிறார். இவரை பார்க்க வருகிறார் அந்த பத்திரிகை அலுவகத்தின் ஓனரும் விஜய் ஆண்டனியின் குருவுமான நிழல்கள் ரவி. விஜய் ஆண்டனியை சென்னை வருமாறு அழைக்கிறார். அவர் மறுத்துவிடுகிறார். அதீத குடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விஜய் ஆண்டனி தனது மகளின் வாழ்க்கைக்காக சென்னை வருகிறார். வந்து அந்த பத்திரிகை அலுவலகத்தில் சாதாரண ஊழியராக பணிபுரிகிறார். அப்போது தனது நண்பன் கொலை சாதாரண கொலையல்ல இதற்கு பின்னால் ஒரு நெட்வொர்க் இருப்பதை அறிந்து அதனை கண்டுபிடிக்க முயல்கிறார். இறுதியில் கண்டுபிடித்தாரா? கொலைக்கான காரணங்கள் என்ன? யார் அந்த நெட்வொர்க் என்பதை சொல்லும் படம்தான் ரத்தம்.

சிஎஸ் அமுதன் இதற்கு முன் எடுத்து தமிழ்ப்படம் சீரிஸ் போலவே இதுவும் இருக்கிறது. எந்தவித சுவாரஸ்யமும் இன்றி காட்சிகள் நகர்கிறது. விஜய் ஆண்டனி தனது வழக்கமான நடிப்பை இதிலும் வழங்கியுள்ளார். அவரது கதாபாத்திரம் அவ்வளவு அழுத்தமாக இல்லை. ஏன் எல்லா கதாபாத்திரங்களும் ஏனோதானோ என்று எழுதப்பட்டுள்ளது. முதல் பாதி ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. இரண்டாம் பாதி அதற்கு இணையாக நம்மை கடுப்பேற்றுகிறது. மஹிமா நம்பியார், கிரைம் எடிட்டராக வரும் நந்திதா , நிழல்கள் ரவி ஆகியோர் தங்களது பணியை நன்றாக செய்திருந்தாலும் அழுத்தமில்லாத காட்சிகள் இவர்களது நடிப்பை வீணடித்துவிட்டன. கண்ணனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓகே. சீரியஸ் படம் என்கிறார்கள் ஆனால் நமக்கு எந்தவித உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. கொலை செய்யும் நெட்வொர்க் பத்தின காட்சிகள் லாஜிக் நிறைய உள்ளது.
மொத்தத்தில் ரத்தம் எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. ரத்தம் – அபத்தம். ரேட்டிங் 3/5

