விமல் நடித்துள்ள “குலசாமி” திரைவிமர்சனம்!

விமல் நடித்துள்ள “குலசாமி” திரைவிமர்சனம்!

நடிகர் விமல் கடந்த வாரம் தெய்வ மச்சான் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை செய்தார். இந்த வாரம் குலசாமி என்ற படத்தில் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். மீண்டும் ஒரு கருத்து சொல்லும் படம்தான் குலசாமி. அதனை முடிந்தவரை பார்க்கும்படி எடுத்து இருக்கலாம்.

விமல் அவருக்கு ஒரே தங்கை பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை செய்கிறார். விமலுக்கு தன் தங்கையை எப்படியாவது டாக்டராக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதால் தங்கை மறுக்கிறார். இதனால் ஊரே சேர்ந்து விமல் தங்கையை படிக்க வைக்கிறது. மதுரையில் தங்கி தனது தங்கையை படிக்க வைக்கிறார். ஒருநாள் விமலின் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். விமலின் தங்கையை யார் கொலை செய்தார்கள்? விமல் அவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? என்பதுதான் குலசாமி.

கல்லூரி தலைமையாசிரியர் தன் மாணவிகளை வறுமையை காட்டி அவர்களை தவறான வழியில் வழிகாட்டுகிறார் இதன் மூலம் பல பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது அதில் ஒருவர் விமல் தங்கை விமல் தங்கை போல் பல பெண்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது இது ஒரு கட்டத்தில் விமலுக்கு தெரிய இந்த கும்பலை பழி வாங்க நினைக்கிறார் இந்த கும்பலை எப்படி பழிவாங்குகிறார் என்பதை இயக்குனர் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைக்கதையாக அமைத்துள்ளார் உண்மை கதை எடுத்து அதற்கான நியாயமான திரைக்கதையை கொடுத்திருந்தால் படம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்லலாம் சண்டையை நம்பிய இயக்குனர் கதையையும் திரைக்கதையையும் கோட்டை விட்டுவிட்டார். சில இடங்களில் காமெடி என்கின்ற பெயரில் நம்மை சோதிக்கிறார்.

நடிகர் விமலுக்கு காதல் படங்களும் நகைச்சுவை படங்களும் தான் எடுபடுகிறது ஆக்சன் படங்கள் நிச்சயமாக அவருக்கு கை கொடுக்கவில்லை குறிப்பாக இந்த படம் அவருக்கு மிகவும் மோசமான ஒரு சோதனை படம் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு நல்ல நடிகரின் பயணத்தில் இப்படி ஒரு படம் தேவையா?.

படத்தின் நாயகியாக தன்யா. இவருக்கு படத்தில் பெரிதாக வேலையும் இல்லை கவர்ச்சியும் இல்லை காதலும் இல்லை விமலுக்கு கிளைமாக்ஸ் காட்சிகளில் உதவி செய்வதாக நடித்திருக்கிறார் மற்றபடி இவருக்கு பெரிதாக வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தின் பின்னணி இசை நம் காதல் கிழிக்கிறது. இயக்குனர் குட்டிப்புலி சரவணன் சக்தி ஒரு உண்மை சம்பவத்தை கதைக்களமாக அமைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் மிகவும் பழமையான திரைக்கதை படத்தில் பொழுதுபோக்கு அம்சம் என்பது எந்த விதத்திலும் இல்லை.

இந்த படத்துக்கு பலம் சேர்க்க விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் பாவம் நட்பின் ரீதியாக இதை ஒத்துக்கொண்டு விட்டாரா என்று தெரியவில்லை வசனங்கள் எங்கும் பேசும் படியாக அமையவில்லை.

இயக்குனர் குட்டிப்புலி சரவணன் சக்தி தான் மனதில் பட்டதை எல்லாம் பல காட்சிகளாக படம் ஆக்கி உள்ளார் படத்தில் பல இடங்களில் லாஜிக் சுத்தமாக இல்லை. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் பரவாயில்லை படமாகக்கூட வந்திருக்கும். இப்போது எதுவும் இல்லாமல் இருக்கிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments