பிளாஸ்ட் திரைப்பட விமர்சனம்!
![]()
பிளாஸ்ட் இந்த படத்தோட கதை என்னன்னா.. ஹீரோ அர்ஜுன் ஒரு கராத்தே மாஸ்டர்.. மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன், தம்பி விவேக் பிரசன்னா என அமைதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காரு.. தன்னோட பொண்ணுக்கு சின்ன வயசுலேயே கராத்தே சொல்லிக்கொடுத்து தைரியமான பொண்ணாவும் தெரிஞ்சவங்க தெரியாதவங்க யாருக்கும் உன் கண்ணு முன்னால அநீதி நடந்தாலும் தட்டிக்கேட்கணும், எப்போதும் பெத்தவங்க உன்கூடயே இருக்க மாட்டாங்க நீதான் உன்ன பாத்துக்கணும் அப்படின்னு சொல்லி வளக்குறாரு.. ப்ரீத்தி முகுந்தனும் அதேமாதிரி துணிச்சலான பொண்ணா வளர்றாங்க.. இன்னொரு பக்கம் கார்ப்பரேட் தொழிலதிபரான ஜான் கொக்கேன் 7000 ரூபாய் கனிமவள புராஜக்டுக்காக ஒரு ஊரையே அழிக்க திட்டம்போடுறாரு.. இதுக்கு லஞ்சமா அமைச்சருக்கு கொடுக்க 1000 கோடி பணத்தை ரெடி பண்றாரு.. ஆனா சூழ்நிலை காரணமா இந்த வில்லன் குரூப்போட நம்ம ஹீரோ குடும்பம் மாட்டிக்கிற சூழல் ஏற்படுது. உண்மையில யார் யாருகிட்ட மாட்டுனாங்க. தங்கள தற்காத்துக்க என்னென்ன பண்றாங்க அப்படிங்கறதுதான் கதை..
ஹீரோ அர்ஜுன் வழக்கம் போல ஆக்ஷன்ல பின்னிட்டாருன்னே சொல்லலாம்.. அன்பான அப்பாவாவும் தேர்ந்த நடிப்ப கொடுத்திருக்காரு.. ப்ரீத்தி முகுந்தன் இதுக்கு முன்னாடி இப்படி நடிச்சது இல்ல அப்படிங்கற மாதிரி அதிரடி சண்டைக் காட்சிகள்ல தூள் கிளப்பியிருக்காங்க.. இவரும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் சேர்ந்து தியேட்டர பிளாஸ்ட் பண்ணிட்டாங்கன்னே சொல்லலாம்..
அமைதியான குடும்பத் தலைவியா ஆரம்பத்துல வந்து பின்னாடி ஆக்ஷன்ல அதகளம் செஞ்சிருக்காங்க அபிராமி.. இவங்க கூட விவேக் பிரசன்னாவும் சேர்ந்து வில்லன் கூட்டத்த அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க.. ஹெட் மாஸ்டர் குடும்பம்னு நெனச்சு வந்த வில்லன் குரூப் கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படி அடி வாங்குறாங்க அப்படிங்கறத பரபர ஆக்ஷன் சீன்ஸ் மூலம் சூப்பரா சொல்லியிருக்காரு இயக்குனர்..
வில்லன் ஜான் கொக்கேன் வழக்கமான வில்லனா வந்தாலும் தன்னோட வேலையை நல்லா செஞ்சிருக்காரு.. அர்ஜுன் சிதம்பரத்தோட நடிப்பு நல்லாவே இருக்கு..
படத்துக்கு மிகப் பெரிய பலம்னா அது பீனிக்ஸ் பிரபுவோட சண்டைக் காட்சிகள் தான்.. இன்டர்வெல் பைட் சீன்லாம் பயங்கரமா இருக்கு.. ரவி பஸ்ரூர் பின்னணி இசை படத்துக்கு வலுவா இருக்கு..
வழக்கமா வில்லன் கூட்டத்துக்கிட்ட இருந்து ஹீரோ தான் தன்னோட குடும்பத்த காப்பாத்துவாரு.. ஆனா இதுல குடும்பமே சேர்ந்து வில்லன் கூட்டத்த பந்தாடுறாங்க அப்படிங்கறதே சுவாரஸ்யமா இருக்கு.. அதுக்கு இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைச்சு ரசிக்கிற மாதிரி கொடுத்திருக்காரு இயக்குனர் சுபாஷ் கே ராஜ்.. படத்துக்கு ஒளிப்பதிவும் நல்லா இருக்கு.. ஒருசில குறைகள் இருந்தாலும் இந்த சம்பருக்கு குடும்பத்தோட போய் எஞ்சாய் பண்றபடமா பிளாஸ்ட் அமஞ்சிருக்கு.. மொத்தத்துல பிளாஸ்ட்.. சரவெடி..

