லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரை விமர்சனம்!

இந்த படத்தோட கதை 2040ல நடக்குது.. எஸ்ஜே சூர்யா எல் ஐ கே அதாவது லவ் இன்சூரன்ஸ் கொம்பனி அப்படிங்கற ஆப் ஒன்ன உருவாக்கி பொதுமக்களுக்காக நடத்திட்டு இருக்காரு.. இது மூலமா தங்களுக்கு பொருத்தமான ஜோடிய தேர்வு செய்யலாம்.. லவ்வர் எங்க இருக்காங்க என்ன பண்றாங்க என எல்லாத்தையுமே கண்காணிக்கலாம்.‌ மொபைல் போனால் பாதிக்கப்பட்டவங்களுக்கு பசுமை உலகம் ஒன்றை நடத்திட்டு இருக்காரு சீமான்.. அவரோட பையன் ஹீரோ பிரதீப் ரங்கநாதன்.. போன் உபயோகிக்காத நபர். நாயகி கிருத்தி ஷெட்டி எப்பேதும் போன், ரீல்ஸ் என சுத்திக்கொண்டு இருப்பவர்.. நாயகிய பார்த்ததும் ஹீரோவுக்கு காதல் வர, அதற்காக போன் வாங்குறாரு.. இந்த நிலையில அந்த எல்ஐகே ஆஃப்பால இவங்க காதல் பிரிகிறது.. இதுனால கடுப்பான ஹீரோ அந்த ஆஃப் பொய்யுன்னு நிரூபிச்சு நாயகியோட மறுபடியும் கைகோர்க்க நினைக்குறாரு.. ஹீரோவோட இந்த திட்டம் பலிச்சுதா அப்படிங்கறதுதான் இந்த படம்..

நாயகன் பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல தன்னோட துறுதுறு நடிப்பால கவர்ந்திருக்காரு.. காதலுக்காக போன் வாங்குறது, அப்பா சொல் மீறாத மகனா நடந்துக்கறது, வில்லன எதிர்த்து சண்ட போடுறது என கலக்கியிருக்காரு.. நடிப்பு ஸ்டைல், டான்ஸ் என பக்கா பேக்கேஜ்ஜா நடிப்ப கொடுத்திருக்காரு..

நாயகி கிருத்தி ஷெட்டி நவநாகரீக பெண்ணா, போன் தான் எல்லாம் அப்படின்னு இருக்கற கேரக்டர்.. அழகாவும் அருமையாவும் பண்ணியிருக்காங்க..

வில்லனா எஸ்ஜே சூர்யா மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்காரு.. தன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில நடந்த கசப்பான விஷயத்தால வேற யாருமே என்னைப் போல பாதிக்க கூடாதுன்னு எல்ஐகே ஆஃப் உருவாக்குறாரு.. அதை வெற்றிகரமா நடத்த எந்த எல்லைக்கும் போற அவரோட கேரக்டர் ஆர்க் நல்லா இருக்கு.. இவரும் சூப்பரான நடிப்ப கொடுத்திருக்காரு.. காமெடி கலந்த வில்லனா அசத்தியிருக்காரு..

சீமான், ஷா ரா, கௌரி கிஷன், விடிவி கணேஷ் என படத்துல இருக்கற மற்ற கதாபாத்திரங்களும் தேவையான நடிப்பை கொடுத்திருக்காங்க.. ரவி வர்மன் ஒளிப்பதிவு காட்சிகள கலர்புல்லா காட்டியிருக்கு.. எதிர்காலத்துல நடக்குற கதை அப்படிங்கறதால அதுக்கான உழைப்ப கொடுத்திருக்காரு. கிராபிக்ஸ் காட்சிகள் நல்லா இருக்கு.. அனிருத் இசை படத்துக்கு மிகப் பெரிய பலமா இருக்கு.. பாடல்கள் மற்றும் பின்னணி இசைல அசத்தியிருக்காரு..

எழுதி இயக்கியிருக்கற விக்னேஷ் சிவன், எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதால மனித உணர்வுகளை கட்டுப்படுத்தவோ உணரவோ முடியாது அப்படிங்கறத சொல்ல நினச்சிருக்காரு.. ஆனா அதுக்கு ஏற்ற வகையில திரைக்கதை இல்லாததால சொல்ல வந்த விஷயங்கள் வேறும் முயற்சியா மட்டுமே போய்டுச்சு.. முதல் பாதி ஒருவழியா ஓடி முடிஞ்சிருது.. இரண்டாம் பாதி ஓரளவுக்கு எதிர்பார்ப்ப பூர்த்தி செஞ்சிருக்கு.. கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான சீன்ஸ் வெச்சிருக்கலாம்.. மொத்தத்துல எல் ஐ கே.. ஓகே..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments