TN 2026: தங்க நட்சத்திரம் திரை விமர்சனம்!

TN 2026 தங்க நட்சத்திரம்.. இந்த படத்தோட கதை என்னன்னா.. வட மாநிலத்தை சேர்ந்த நட்டி, பிழைப்புக்காக சென்னை வந்து எதிர்பாராதவிதமா நடிகர் ஆகிடுறாரு.
முதல் படம் நல்லா ஓட, இவரு சினிமால மிகப் பெரிய ஸ்டாரா வருவாருன்னு மக்கள் பேசிக்குறாங்க.. இத பார்த்த மிகப் பெரிய பணக்காரரான பண்ணையார் தம்பி ராமையா, நட்டிய தன் கண்ட்ரோல்ல வெச்சுகிட்டு அவர தமிழ் சினிமால மிகப் பெரிய ஸ்டாரா மாத்துறாரு. தம்பி ராமையா எதிர்பார்த்தது போலவே சினிமால மிகப் ஸ்டார் ஆகுறாரு நட்டி.. அதுக்கு அப்புறம் அவரை அரசியல் பேச வைத்து புதிய கட்சியும் தொடக்க வைக்குறாரு தம்பி ராமையா.. 2026ல தமிழ்நாட்டோட முதல்வரு நம்ப வெச்சு தம்பி ராமையா காய் நகர்த்துற நிலையில, நட்டி மிகப் பெரிய அதிர்ச்சி முடிவ எடுக்குறாரு.. அது என்ன‌ முடிவு, நட்டி முதல்வர் ஆனாரா. தம்பி ராமையா கனவு நனவாச்சா அப்படிங்கிறதுதான் கதை..

நடிகர் நட்டி நடிப்புல அசத்தியிருக்காரு.. குல்கந்த் குமார் அப்படிங்கற கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்காரு.. சாதாரண நடிகனா தமிழ தப்புத் தப்பா பேசிக்கிட்டு தமிழ் சினிமால நுழைஞ்சு மிகப் பெரிய ஸ்டார் ஆகுற நடிகயோட அசலான நடிப்ப தன்னோட உடல்மொழில கச்சிதமா கொண்டு வந்துருக்காரு.. கொஞ்சம் கொஞ்சமா உச்சத்துக்கு வரும்போது அவர் கொடுக்குற ரியாக்ஷன் வேற லெவல் ரகம்.. நிச்சயம் இந்த படம் நட்டிக்கு பேர் சொல்ற படமா இருக்கும்..

ஜமீனாக நடிச்சிருக்கற தம்பி ராமையா, படத்தோட பலம்னே சொல்லலாம். நட்டியோட அரசியல் வழிகாட்டியா அசத்தலான நடிப்பை கொடுத்திருக்காரு. எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோரோட அனுபவ நடிப்பு படத்துக்கு கை கொடுக்குது..

கதாநாயகியாக நடித்திருக்குற ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன் இவங்களோட நடிப்புலயும் குறையில்ல. யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி இருப்பு படத்துக்கு சிறப்பு.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா பழைய காலக்கட்டங்களுக்கான காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள வண்ணங்கள் மூலம் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்காரு.. இயல்பான ஒளிப்பதிவு படத்துக்கு உறுதுணையா இருக்கு..தர்புகா சிவாவோட இசையில பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்லா இருக்கு..

கதை எழுதியிருக்கற தம்பி ராமையா, தன்னோட இத்தனை வருட திரை அனுபவத்துல பார்த்த பல விஷயங்கள லாவகமா புகுத்தியிருக்காரு.. அரசியல்வாதிகள மேலோட்டமா நையாண்டி செஞ்சாலும்
அரசியல் ஆசையில வலம் வரும் நடிகர்களையும் போற போக்குல பகடி பண்ணியிருக்காரு..

அப்பாவோட கதைக்கு திரைக்கதை அமைச்சு இயக்கியிருக்கற உமாபதி ராமையா, தன்னோட அப்பா காலத்து அரசியல் மற்றும் தன்னோட காலத்து அரசியல் நிகழ்வுகள ஆராய்ச்சி செஞ்சு திரைக்கதை எழுதியிருக்காரு..
நடிகர்களுக்கு அரசியல் ஆசை வருவதற்கான காரணத்தை முடிஞ்ச வரைக்கும் உண்மைக்கு நெருக்கமா சொல்லியிருக்காரு.. அமைதிப்படை படத்துக்கு பிறகு ஒரு முழு அரசியல் நையாண்டி படத்த பார்க்க முடியவில்லையே அப்படிங்கற ஏக்கத்தை இந்த படம் ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் அப்படின்னு எதிர்பார்க்கலாம்.. திரைக்கதையில இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தா சூப்பர் படமா வந்திருக்கும்.. ஆனாலும் ஒருமுறை நிச்சயம் பார்க்ககூடிய படமா எடுத்துருக்காங்க.. மொத்தத்துல TN 2026.. அரசியல் ஆட்டம்..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments