வித் லவ் திரைப்பட விமர்சனம்!
வித் லவ்.. இந்தப் படத்தோட கதை என்னன்னா.. நாயகன் அபிஷன் ஜீவிந்
திருமணத்துக்காக தன்னோட அக்கா சொன்ன நாயகி அனஸ்வரா ராஜனை சந்திக்கிறாரு.. ரெண்டு பேரும் தங்கள பத்தி பேசும் போது தங்களோட ஃபர்ஸ்ட் லவ் பத்தியும் பேசுறாங்க.. இந்த நிலையில நாயகி அனஸ்வரா ராஜன் ஒரு யோசனை சொல்ல, ரெண்டு பேருமே தங்களோட முதல் காதல தேடிப்போறாங்க.. அந்த பயணத்துல இருவருக்கும் கிடைக்கும் அனுபவங்களே இந்தப் படம்..
![]()
நாயகன் அபிஷன் ஜீவிந் பள்ளி மாணவராக செட் ஆகி விடுகிறாரு.. ஃபர்ஸ்ட் பார்க்குற அப்போ கொஞ்சம் அந்நியா தெரிஞ்ச அவரு போக போக ரசிக்க வெச்சிடுறாரு.. பள்ளி மாணவன், இளைஞன் என ரெண்டு விதமான தோற்றத்துல நல்ல நடிப்பை கொடுத்திருக்காரு.. முதல் காதல் வரும் பள்ளிப்பருவத்துல நடக்குற மன மாற்றங்களையுமே தன்னோட அழகான நடிப்பாக கச்சிதமா கொண்டுவந்திருக்காரு.. அடுத்தடுத்த படங்கள்ல இன்னும் ரசிக்க வைப்பாருன்னு நம்பலாம்.
நாயகி அனஸ்வரா ராஜன் படத்துக்கு மிகப் பெரிய பலம்னே சொல்லலாம்.. தன்னோட முதல் காதல் ஏற்படுத்துன குற்ற உணர்ச்சியால தவிக்குற சீன்ஸ்ல சூப்பரான நடிப்ப கொடுத்திருக்காங்க.. அவங்களோட டப்பிங்ல கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.. படம் முழுக்க துறுதுறுன்னு இருக்காங்க..அழகாவும் நடிச்சிருக்காங்க..

அனிஷாவா நடிச்சிருக்கற காவ்யா அனில் சூப்பரான நடிப்ப கொடுத்திருக்காங்க.. படம்பாக்குறவங்களோட முதல் காதல் அனுபவத்த மீண்டும் நினச்சு பாக்குற மாதிரி நடிச்சு ரசிக்க வெச்சிருக்காங்க.. காபி ஷாப்ல இவங்களுக்கும் நாயகனுக்கும் நடக்குற உரையாடல் சீன் கவிதை..
தேனி முருகன், சரவணன், ஆர்ஜே ஆனந்தி, ஹரிஷ் குமார், சித்தார்த் என படத்துல நடிச்சிருக்கற மற்ற கதாபாத்திரங்களும் படத்துக்கு தேவையான நடிப்ப கொடுத்திருக்காங்க..
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவோட ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கு.. நாமளும் அந்த பள்ளியில படிச்ச உணர்வ தன்னோட கேமரால கொண்டு வந்து அசத்தியிருக்காரு.. ஷான் ரோல்டன் இசையில பாடல்கள் கூடுதல் சிறப்பு.. பின்னணி இசையில மேஜிக் செஞ்சிருக்காரு..
வழக்கமான பள்ளிப் பருவ காதல் கதையாக இருந்தாலுமே திரைக்கதைல அங்க அங்க சுவாரஸ்யம் சேர்த்து ரசிக்குற மாதிரி கொடுத்திருக்கிறாரு இயக்குனர் மதன்.. ஒருவரோட வாழ்க்கையில முதல் காதல் எப்போதுமே மறக்க முடியாத ஒன்னு. அது கிளறிவிடுற நியாபகங்கள் மனசுல அழியாத சுவடு போல இருக்கும்..அந்த முதல் காதல் அனுபவங்கள வலியோடு சொல்லாம கலகலப்பா ஒரு ஃபீல் குட் படமா சொல்லி ரசிக்க வெச்சிருக்காரு இயக்குனர்.. மொத்தத்துல வித் லவ்.. காதலும் காதல் நிமித்தமும்..

