குடும்பஸ்தன் திரை விமர்சனம்!

குடும்பஸ்தன் திரை விமர்சனம்!

நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் ராஜேஷ்வர் காளிசாமி. இவர் தற்போது குடும்பஸ்தன் என்ற படத்தை இயக்கி உள்ளார். மணிகண்டன், சான்வி மேகனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி, நாயகன் மணிகண்டன் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் இருவீட்டிலும் எதிர்த்தாலும் பிறகு தனது அம்மா வீட்டிலேயே வசித்து வருகின்றனர். இவரது அக்கா கணவர் குரு சோமசுந்தரம் எப்போதுமே மணிகண்டனை குறை கூறிக் கொண்டே இருப்பார். இந்த நிலையில் தான் வேலை செய்யும் இடத்தில் நடத்த ஒரு பிரச்சினையால் வேலையை இழக்கும் நாயகன் இதனை வீட்டில் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.இதனை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் மனைவி, அம்மா ஆன்மீக சுற்றுலா செல்ல பணம் வேண்டும், வீட்டை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் நாயகனை துறத்த இறுதியில் என்ன ஆனது என்பதே குடும்பஸ்தன்.

அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். இந்த சீரியஸான கதையை காட்சிக்கு காட்சி சிரிக்கும் வகையில் எடுத்து படம் பார்ப்பவர்களை குதூகலப்படுத்தி உள்ளார். முதல் பாதி முழுவதும் காமெடி, இரண்டாம் பாதியில் கொஞ்சம் சென்டிமென்ட், இறுதியில் காமெடியுடன் படத்தை முடித்து ஃபீல் குட் படமாக முடித்து ரசிக்க வைத்துள்ளார்.

மணிகண்டனுக்கு குட் நைட், லவ்வர் படங்களை தொடர்ந்து தற்போது குடும்பஸ்தன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார்‌. இப்படத்தில் மிடில் கிளாஸ் மனிதாக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். காதலில் உருகுவது, வேலை போனபிறகு வரும் பிரச்சினைகளை புலம்பிக் கொண்டே சமாளிப்பது, வயிற்றில் இருக்கும் தனது குழந்தையிடம் அழுதுகொண்டே பேசுவது என படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மனைவியாக வரும் சான்வி மேகனா நடிப்பும் நன்று.

நண்பர்களாக வரும் ஜென்சன் உள்ளிட்டோரின் நடிப்பும் அக்காவாக வரும் நிவேதிதாவின் நடிப்பும் அருமை. மச்சானாக வரும் குரு சோமசுந்தரம் கலக்கியுள்ளார். ஐடி கம்பெனியில் உயர் பதவியில் இருக்கும் அவர் செய்யும் சேட்டைகள் கலக்கல் ரகம். படத்தின் மிகப் பெரிய பலம் பிரசன்னா மற்றும் இயக்குனர் ராஜேஷ்வரின் வசனங்கள் தான். காமெடியாகட்டும் இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் வசனங்கள் ஆகட்டும் படத்தின் தூண்களாக உள்ளன. வைசாக்கின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை நன்று.

மொத்தத்தில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது இப்படம். குடும்பஸ்தன் – தலைவன். ரேட்டிங் 3.5/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments