சுனைனா நடித்துள்ள “ரெஜினா” திரைவிமர்சனம்!

சுனைனா நடித்துள்ள “ரெஜினா” திரைவிமர்சனம்!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நாயகிகள் நடித்து வரும் நிலையில் இந்த வாரம் அந்த பட்டியலில் இணைந்துள்ளவர் சுனைனா. சுனைனா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரெஜினா. பவா செல்லதுரை, விவேக் பிரசன்னா, ரித்து நிவாஸ், ஆதித்தன் தீனா மற்றும் பலர் நடிப்பில் டொமைன் டி சில்வா இயக்கத்தில் சதீஷ் நாயர் இசையில் வெளிவந்திருக்கும் படம் ரெஜினா.

தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்த திரைக்கதை தான் கணவனை கொலை செய்து விடுகிறாகள் அதற்கு நீதி கேட்டு போராடுகிறாள் நீதி கிடைக்கவில்லை இதனால் அவர்களை பழி வாங்குகிறார் இதுதான் படத்தின் ஒன் லைன்.

படத்தின் இயக்குனர் டொமின் டி செல்வா இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான திரைக்கதையை கொடுத்து விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை இருந்தும் படத்தில் தொய்வு ஏற்படுகிறது காரணம் கதாபாத்திரங்களின் காட்சி அமைப்பு படத்திற்கு சிறப்பாக இல்லை பல காட்சிகள் மிக நீளமாக இருப்பதினாலும் பல இடங்களில் பல குழப்பங்கள் ஏற்படுவதால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது. இயக்குனர் பல இடங்களில் கதையை விட சதையை அதிகமாக நம்பி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதிகமான கிளாமர் காட்சிகளும் சில இடங்களில் இது வேறுபடமா என்று தோன்றி வைக்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கிறது.

படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது சுனைனா நடிப்பு அற்புதமான ஒரு நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். ஒரு நல்ல ஆக்சன் நடிகை என்பதை சுனைனா இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார்.
பவா செல்லதுரை, டேனியல் போன்றவர்களின் நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலத்தை சேர்த்து இருக்கிறது. ஆனால் முதல்பாதி ஆமையை விட மெதுவாக நகர்கிறது. இசையமைப்பாளர் சதீஷ் நாயர் பாடல்கள் சற்று கேட்கும் படி இருக்கின்றன. பின்னணி இசையும் ஓகே. இரண்டாம் பாதி சற்று பரவாயில்லை. மொத்தத்தில் ரெஜினா – சோதனை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments