சீனு ராமசாமிக்கு எனது நன்றிகள் – இயக்குனர் மிஷ்கின்!


சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் சாமானியனின் வாழ்வியலை பிரதிபலிப்பதாக படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மாமனிதன் படம் பார்த்த இயக்குனர் மிஷ்கின், சீனு ராமசாமியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது . மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது . ராதாகிருஷ்ணன் ஓடுகிறான் . வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள் , நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது . அவன் ” மாமனிதன் ” ஆகிறான் . ‘ மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம் .

இந்தப்படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது . என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது . மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments