நடிகர் பூ ராமு காலமானார்!

நடிகரும் எழுத்தாளருமான பூ ராமு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பூ ராமு. இவர் சசி இயக்கிய பூ, நீர்ப்பறவைகள், தங்க மீன்கள், வீரம், ஜில்லா, நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப் போற்று, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நடிகர் பூ ராமுவின் உடல் ஊரப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு செல்லப்பட உள்ளது – பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.