இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்! வயது 72.
![]()
இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்! வயது 72.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் விளங்கிய டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் டி.பி.கஜேந்திரன். எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன்” உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தவர் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடும்பப் பின்னணியில் நகைச்சுவை கலந்த திரைப்படங்களை எடுத்து ரசிகர்களை மகிழ்வித்தவர்.

