மனிதன் தெய்வமாகலாம் திரைப்பட விமர்சனம்!
மனிதன் தெய்வமாகலாம் திரைப்பட விமர்சனம்!
![]()
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்துல செல்வராகவன், குஷி ரவி நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் மனிதன் தெய்வமாகலாம்.. இந்த படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்..
படத்தோட ஆரம்பத்தில் செல்வராகவனை சிறைக் கைதியாக காட்டுறாங்க.. அதன்பிறகு கதை பிளாஷ்பேக்குக்கு போகுது.. அப்பா அம்மா இல்லாத நாயகன் செல்வராகவன் தன்னோட ஊர்ல நுங்கு வியாபாரம் செஞ்சிட்டு வர்றாரு. அவருக்கு தன்னோட சொந்தக்கார சிறுமி மீது பாசம் அதிகம்.. அந்த ஊர்ல சாலை, தெருவிளக்கு இப்படி எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இந்த நிலையில நாயகன் செல்வராகவனுக்கும் நாயகி குஷி ரவிக்கும் திருமணம் நடக்குது.. ரெண்டுபேரும் ஒரு ஹோட்டல் வெச்சு வாழ்க்கைய நல்லா வாழ்ந்திட்டு இருக்கும் போது அவங்க வாழ்க்கையில மிகப் பெரிய இடி ஒன்னு விழுகுது.. அது என்ன இடி.. அது நாயகன் வாழ்க்கைய எப்படி புரட்டி போடுது அப்படிங்கறதுதான் இந்த படத்தோட கதை..
நாயகன் செல்வராகவன் வழக்கம் போல தனக்கு என்ன வருமோ அதமட்டும் பண்ணியிருக்காரு.. சிறுமி மேல பாசமா இருக்குறது.. மனைவி மேல அன்ப காட்டுறது.. பிரச்சனை வந்தா கோபமா சண்டை போடுறதுன்னு ஓரளவுக்கு நடிப்ப கொடுத்திருக்காரு..கிளைமாக்ஸ்ல அவர் எடுக்குற அவதாரம் பகாசூரன் ஃபார்முலா..
நாயகி குஷி ரவி. அழகா இருக்காங்க.. அளவாவும் நடிச்சிருக்காங்க.. அவரோட முடிவு பரிதாபம்.. நடிகை கௌசல்யா தனக்கு கொடுத்த வேலைய குறையில்லாம பண்ணியிருக்காங்க.. மாமாவா நடிச்சவரு, அந்த சிறுமி, முதியவர் என படத்துல வர்ற சின்ன சின்ன கேரக்டர்களும் குறையில்லாத நடிப்ப கொடுத்திருக்காங்க..
வில்லனா நடிச்சிருக்கற மைம் கோபி பல படங்கள்ல பண்ணுன அதே வில்லத்தனத்த இதுலயும் பண்ணியிருக்காரு.. தன்கிட்ட வட்டிக்கு பணம் வாங்குன பெண்கள தன்னோட வலையில விழ வெச்சு சீரழிக்கும் கேரக்டர் இவருக்கு.. அத நல்லாவே பண்ணியிருக்காரு.. நல்ல எம்எல்ஏவா தன்னோட அனுபவ நடிப்ப கொடுத்திருக்காரு ஒய் ஜி மகேந்திரன்..
ரவி வர்மாவோட ஒளிப்பதிவு கிராமத்து அழக அருமையா காட்டியிருக்கு.. படம் இரண்டு மணிநேரம் தான் என்றாலுமே நிறைய காட்சிகள் நீளமா இருக்கு.. எடிட்டர் தீபக் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.. ஏகே பிரியன் இசையில பாடல்கள் ஓகே ரகம்.. பின்னணி இசை நல்லாவே இருக்கு..
எழுதி இயக்கியிருக்கற டென்னிஸ் மஞ்சுநாத் தமிழகத்துல நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்த எடுத்திருக்காரு.. ஆனா எந்தவித சுவாரஸ்யமும் இல்லாத தொய்வான திரைக்கதை படத்துக்கு மைனஸா அமஞ்சிருக்கு.. கிளைமாக்ஸ் வரைக்கும் படம் எத நோக்கி போகுதுன்னு தெரியாம இலக்கில்லாம பயணிக்குது.. கிளைமாக்ஸும் ஏற்கனவே பல படங்கள்ல பார்த்து சலித்துபோன ஒன்னுதான்.. எந்த விஷயத்துக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. ஒரு படைப்பாளி என்றைக்குமே இதுபோன்ற விஷயங்களுக்கு ஆதரவு தரக்கூடாது.. பிரச்சனையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் அதனை தைரியமாவும் எதிர்கொள்ள வழிநடத்த வேண்டும்.. அடுத்தடுத்த படங்களில் இயக்குனர் அதனை புரிந்து செயல்படுவார் என்று நம்பலாம்..
மொத்தத்துல மனிதன் தெய்வமாகலாம்.. இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்…

