எப்படி இருக்கிறது “காபி வித் காதல்” : திரை விமர்சனம்!
![]()
சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடியும் கிளாமரும் தூக்கலாக இருக்கும். அரண்மனை சீரிஸுக்கு பிறகு மீண்டும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் காதல் கதையுடன் வந்துள்ளார்.
காபி வித் காதல் திரைப்படம் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியைப் பற்றியது. மூத்த மகன், தன் தந்தையைப் போல இருக்க விரும்புகிறான், மிகவும் பொறுப்பானவன். மேலும் இரண்டு மகன்களும் கட்டுப்பாடற்றவர்கள். மீதிப் படம் அவர்களது குடும்பத்தின் திருப்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் ஜெய் மாளவிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்வார், ஆனால் அவர் அமிர்தா ஐயரை காதலிப்பதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், ஜீவா மாளவிகா சர்மாவை காதலிக்கிறார். இது ஒரு முக்கோண காதல் கதை. யோகி பாபு திருமண ஏற்பாட்டாளராக இருப்பார். யாருடைய காதல் வெற்றி பெறும்? கலப்பு ஜோடிகளுக்கு என்ன நடக்கும்? இவற்றுக்கான விடைகள்தான் மீதிக்கதை.

கதையாகவே மிகவும் குழப்பமான கதையை யாருக்கும் குழப்பம் ஏற்படாதவகையில் எடுக்க நினைத்து அதில் பாதி வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி கூட்டணியில் காமெடி எடுபடவில்லை. கொஞ்சம் சிரிப்பு மீதி கடுப்பு என்ற வகையில் தான் இருக்கிறது. அமிர்தா, மாளவிகா, சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைஷா வில்சன் என நாயகிகள் பட்டாளம். இதில் யாரை யார் காதலிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே தலை சுற்றுகிறது. தம்பிக்கு பார்த்த பெண்ணை அண்ணன் விரும்புவது, அண்ணன் அனுபவித்த பெண்ணை தம்பிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிப்பது என கேவலமான கதையை எடுத்து வைத்துள்ளனர். யுவன் இசையில் பாடல்கள் ஓகே. ஜெய், ஜீவா இருவரின் நடிப்பும் நன்று. ஆனால் சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் படம் தடுமாறி நிற்கிறது. ஒருமுறை பார்க்கலாம் உங்களுக்கு மன தைரியம் இருந்தால்.

