எப்படி இருக்கு அரண்மனை 4 – திரை விமர்சனம்!

எப்படி இருக்கு அரண்மனை 4 – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் சுந்தர் சி. காமெடி படங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் அரண்மனை சீரிஸ் மூலம் அவர்களை பயமுறுத்தினார். முதல் இரண்டு பாகங்கள் வெற்றிபெற மூன்றாவது படம் சொதப்பியது. ஆனாலும் தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார். கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று பார்க்கலாம்.

சுந்தர் சியின் தங்கையான தமன்னா பெற்றோர்களை எதிர்த்து சந்தோஷ் பிரதாப்பை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். பத்து ஆண்டுகள் கழித்து தமன்னா தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவரது கணவர் சந்தோஷ் பிரதாப் நெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாகவும் சுந்தர் சிக்கு தகவல் வருகிறது. இதனை அடுத்து தனது தங்கை வீட்டுக்கு செல்லும் சுந்தர் சி தங்கையும் அவரது கணவரும் எப்படி இறந்தார்? அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள் என்ன? தங்கை மகளை கொல்லத் துடிக்கும் பேய் யார்? அந்த பேயிடம் இருந்து தங்கையின் மகளை காப்பாற்றினாரா என்பதுதான் இப்படத்தின் கதை.

பொதுவாக அரண்மனை சீரிஸில் கிளாமர் காட்சிகள் சற்று தூக்கலாக இருக்கும் ஆனால் இப்படத்தில் அதை எல்லாம் தவிர்த்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துள்ளார் சுந்தர் சி பாராட்டுக்கள். கடந்த மூன்று படங்களில் எது எல்லாம் கிண்டல் செய்யப்பட்டதோ அதனை இதில் தவிர்த்திருப்பது நன்று. அதேபோல் குத்துப்பாட்டு, டான்ஸ் எதுவும் இல்லாமல் இருப்பது ஆறுதல். நகைச்சுவைக்கு யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, லொள்ளு சபா ஷேஷு ஆகியோர் இருக்கின்றனர். ஆனால் காமெடி ஒருசில இடங்களில் மட்டுமே ஒர்க்ஆகியுள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில இடங்களில் காமெடி நன்றாக உள்ளது.

தமன்னா இப்படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். கவர்ச்சி வேடங்களில் பார்த்துவந்த அவர் இப்படத்தில் பாசக்கார அம்மாவாக ரசிக்க வைக்கிறார். பேயிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற அவர் படும்பாடும் பேயாக வந்து பயமுறுத்தும் காட்சிகளும் அருமை. ராஷி கண்ணா வழக்கமாக வந்துபோகிறார். சுந்தர் சி தன்னால் முடிந்த அளவு கதைக்கு பங்காற்றியுள்ளார். கிளைமாக்ஸ் பாடலில் குஷ்புவும் சிம்ரனும் ஆடியுள்ளனர். கிளைமாக்ஸ் வழக்கமான அரண்மனை பட பாணிதான். ஆனாலும் முந்தைய அரண்மனை சீரிஸ்களுக்கு இது சற்று மேலாக உள்ளது. குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் ஓகே. இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்துள்ளனர்.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு மற்றுமொரு பலம் என்றே சொல்லலாம். மொத்தத்தில் அரண்மனை 4 – கோடை கொண்டாட்டம். ரேட்டிங் 3.5/5.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments